விக்னேஷ் சிவனை பிரியும் நயன்தாரா? தவிப்பில் விக்னேஷ் சிவன்..

நயன்தாரா
மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் காதலிப்பது உலகம் அறிந்த விஷயம். கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான
நானும் ரவுடி தான்
படத்தின் மூலம் இவர்களுக்குள் காதல் பிறந்தது .அப்போதே டாப் ஹீரோயினாக இருந்த நயன்தாராவிடம் கதை சொன்னால் மட்டும் போதும் என்ற மனநிலையில் தான் விக்னேஷ் சிவன் நயன்தாராவிடம் நானும் ரவுடி தான் கதையை சொல்லபோனாராம்.

இக்கதை நயன்தாராவிற்கு பிடிக்கும் என்று விக்னேஷ் சிவனுக்கு நம்பிக்கையே இல்லையாம். ஆனால் நயன்தாராவிற்கு கதையையும் தாண்டி விக்னேஷ் சிவனையே பிடித்துவிட்டதாம். அதைத்தொடர்ந்து இவர்கள் காதல் மலர்ந்தது.

தனுஷ் குடும்பத்தினருடன் நெருக்கம் காட்டும் ஐஸ்வர்யா: குழம்பித் தவிக்கும் ரசிகர்கள்..!

கடந்த ஏழு வருடங்களாக காதலிக்கும் இவர்கள் விரைவில் திருமணம் செய்துகொள்ளப்போகிறார்கள் என்ற தகவலும் வந்துள்ளன. இந்நிலையில் அடுத்தடுத்து படங்களில் பிஸியாக இருக்கும் நயன்தாரா ஒரு வாரகாலம் விக்னேஷ் சிவனை விட்டு பிரியப்போகின்றாராம்.

நயன்தாரா-விக்னேஷ் சிவன்

ஒரு பக்கம் விக்னேஷ் சிவன் தற்போது அஜித்தின் பட வேலைகளில் இருக்கின்றார். மறுபக்கம் நயன்தாரா தமிழ் படங்களையும் தாண்டி பாலிவுட் படங்களிலும் நடிக்கவுள்ளார். என்னதான் இருவரும் பிஸியாக இருந்தாலும் அடிக்கடி சுற்றுலா செல்வதையும் தினமும் சந்திப்பதையும் வாடிக்கையாக வைத்துள்ளனர்.

நயன்தாரா-விக்னேஷ் சிவன்

.இந்நிலையில் பாலிவுட் பட வேலையாக நயன்தாரா ஒரு வாரகாலம் மும்பை செல்லஇருப்பதால் அவரை ஒருவாரம் பார்க்கமுடியாது என வருதத்தில் இருக்கிறாராம் விக்னேஷ் சிவன். மேலும்
அஜித்
62 பட வேலைகளும் தீவிரமாக நடைபெறுவதால் இப்போதைக்கு சுற்றுலா செல்லும் வாய்ப்பும் இல்லை என்பதால் கடும் அப்சட்டில் விக்னேஷ் சிவன் இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

BEAST VS KGF2 : யார் படம் ஓடும்?

அடுத்த செய்திதனுஷ் குடும்பத்தினருடன் நெருக்கம் காட்டும் ஐஸ்வர்யா: குழம்பித் தவிக்கும் ரசிகர்கள்..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.