விமானப் பயணிகளுக்கு குட் நியூஸ் சொன்ன மத்திய அரசு!

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, சர்வதேச விமானப் போக்குவரத்துக்கு 2020 மார்ச் 23 ஆம் தேதி மத்திய அரசு தடைவிதித்தது. இதையடுத்து விமானப் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்படுவதாக
மத்திய விமானப் போக்குவரத்து இயக்குநரகம்
அறிவித்தது.

இதன் காரணமாக இந்தியாவில் இருந்து உலகின் பல்வேறு நாடுகளுக்கு கடந்த இரண்டாண்டுகளாக பயணிகள் விமானங்கள் இயக்கப்படவில்லை. இருப்பினும் கொரோனா இரண்டாவது, மூன்றாவது அலை கட்டுக்குள் வந்த பிறகு சில நாடுகளுக்கு மட்டும் கடந்த சில மாநங்களாக
விமான சேவை
வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தற்போது கொரோனா பரவல் உலக அளவில் குறிப்பிடத்தக்கபடி குறைந்துள்ளதை அடுத்து, இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு
சர்வதேச விமான போக்குவரத்து
சேவை இன்று முதல் மீண்டும் வழக்கம்போல் தொடங்குவதாக மத்திய விமானப் போக்குவரத்து இயக்குநரகம் அறிவித்துள்ளது.

பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட 27 நாடுகளில் உள்ள 43 இடங்களுக்கு வாரத்திற்கு மொத்தம் 1,466 புறப்பாடுகள் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த ஆண்டு கோடை கால அட்டவணைபடி வாரத்திற்கு 3,200க்கும் மேற்பட்ட விமானங்களின் புறப்பாடுகள் இந்தியாவில் இருந்து இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அடுத்த செய்திசெப். 30 வரை இலவசம் – குடும்ப அட்டைதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.