உக்ரைன் மீது ரஷ்யா படையெடுப்பு தொடர்பில் பல ஆண்டுகளுக்கு முன்னமே கணித்துள்ள பாபா வங்கா விளாடிமிர் புடின் தொடர்பில் குறிப்பிட்டுள்ள கணிப்பு கவனத்தை ஈர்த்து வருகிறது.
கிழக்கு ஐரோப்பிய நாட்டவரான பாபா வங்கா 50 ஆண்டுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட கணிப்புகளை வெளியிட்டுள்ளார்.
இயற்கை பேரிடர் மற்றும் போர்கள் ஏற்படுவதற்கு முன்பு அவை பற்றியும் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
தற்போது, விளாடிமிர் புடின் மற்றும் ரஷ்யா தொடர்பில் அவர் குறிப்பிட்டிருந்த கணிப்புகள் கவனத்தை ஈர்த்துள்ளது.
ரஷ்யாவும் விளாடிமிர் புடினும் உலக நாடுகளில் ஆதிக்கம் செலுத்துவார்கள் என பாபா வங்கா குறிப்பிட்டுள்ளார்.
அதில், அனைத்தும் கரையும், பனி போல, ஒன்று மட்டுமே தீண்டப்படாமல் இருக்கும் – விளாடிமிரின் மகிமை, ரஷ்யாவின் மகிமை என பாபா வங்கா குறிப்பிட்டுள்ளார்.
மட்டுமின்றி, ரஷ்யாவை எவராலும் இனி தடுத்து நிறுத்த முடியாமல் போகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், எதிர்படும் அனைத்தும் அவரால் அப்புறப்படுத்தப்படும், கைப்பற்றப்படுவதை தக்கவைத்துக் கொள்வார், அதனால் உலகத்தையும் ஆள்வார் என பாபா வங்கா குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்யாவின் எதிர்காலம் மிகச் சிறப்பாக இருக்கும் எனவும், அது விளாடிமிர் புடின் காலத்தில் மகிமை பெறும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மட்டுமின்றி, மூன்றாம் உலகப் போர், அணு ஆயுதங்கலின் பயன்பாடு தொடர்பிலும் பாபா வங்கா குறிப்பிட்டுள்ளார்.
உலக நிகழ்வுகள் மற்றும் மனிதகுலத்தின் நிலை பற்றிய அவரது பல கணிப்புகள் நடந்தேறியுள்ளன, இதில் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் எழுச்சி மற்றும் இரட்டைக் கோபுரங்களின் வீழ்ச்சியை அவர் கணித்ததாகக் கூறப்பட்டது.
பாபா வங்கா வெளியிட்டுள்ள கணிப்புகளில் 68% அளவுக்கு நடந்துள்ளதாக நிபுணர்கள் கூறி வந்தாலும், அவரது ஆதரவாளர்கள் அதற்கு மறுப்பு தெரிவித்து, 85% அளவுக்கு நடந்தேறியுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.