அதிபராக விளாதிமிர் புதின் தொடர்ந்து அதிகாரத்தில் நீடிக்க முடியாது என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்த கருத்திற்கு, ரஷ்ய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.
அரசு முறைப் பயணமாக போலந்து சென்ற ஜோ பைடன், புதின் தொடர்பாக அவ்வாறு கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு, ரஷ்யாவில் ஆட்சி மாற்றம் தொடர்பாக பைடன் பேசவில்லை என்றும் அண்டை நாடுகளின் மீது புதின் அதிகாரம் செலுத்துவதைத் தடுக்க வேண்டும் என்பதை தான் பைடன் அவ்வாறு பேசியதாக வெள்ளை மாளிகை விளக்கம் அளித்திருந்தது.
இந்நிலையில், ரஷ்ய நாட்டின் அதிபரை பைடன் முடிவுசெய்யக்கூடாது என்றும் மக்கள் தான் அதிபரை தேர்வு செய்வார்கள் என்றும் புதினின் செய்தித்தொடர்பாளர் பெஸ்கோவ் தெரிவித்துள்ளார்.