Women World Cup Cricket Update : நியூசிலாந்தில் நடைபெற்று வரும் மகளிர் உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் கட்டாய வெற்றியை நோக்கி தென்ஆப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கிய இந்திய மகளிர் அணி தோல்வியை தழுவியதால் அரையிறுதி வாய்ப்பு பறிபோனது.
மகளிர் உலககோப்பை கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. 8 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரில், ஆஸ்திரேலியா தென்ஆப்பிரிக்கா மற்றும் இங்கிலலாந்து அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறிவிட்ட நிலையில், 6 போட்டிகளில் விளையாடிய இந்திய அணி 3 வெற்றிகளுடன் அரையிறுதி வாய்ப்பில் நீடித்தது.
இந்நிலையில் கிறிஸ்ட்சார்ஜில் நடைபெற்ற 28-வது லீக் ஆட்டத்தில் இந்திய அணி தென்ஆப்பிரிக்க அணியுடன் மோதியது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதி சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற நிலையில், டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் மிதாலி ராஜ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி அதிரடியாக ஆடி ரன்கள் சேர்த்தது.
முதல் விக்கெட்டுக்கு 90 ரன்கள் சேர்த்த நிலையில், அரைசதம் கடந்த தொடக்க வீராங்கனை ஷபாலி வர்மா 53 ரன்களிலும், அடுத்து களமிறங்கிய யாஷிகா 2 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். சிறப்பாக விளையாடிய ஸ்மிருதி மந்தனா 71 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து அரைசதம் கடந்த கேப்டன் மிதாலி ராஜ் 68 ரன்களிலும். ஹர்மன்பீரீத் கவுர் 48 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். நிர்ணையிக்கப்பட்ட 50 ஓவர்களில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 274 ரன்கள் குவித்தது.
தொடர்ந்து 275 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய தென்ஆப்பிரிக்க அணியின் தொடக்க வீராங்கனை லீ 6 ரன்களில் ஆட்டமிழந்தாலும், மற்றொரு வீராங்கனை லுரா 80 ரன்களும். லாரா 49 ரன்களும், கேப்டன் லூயிஸ் 22 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், கடைசி கட்டத்தில், மெரிசான் 32 ரன்களும், ட்ரையான் 17 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும், மறுமனையில் மிக்னோன் அரைசதம் கடந்து அசத்தினார்.
கடைசி ஓவரில் தென்ஆப்பிரிக்க அணிக்கு 7 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், தீப்தி சர்மா வீசிய அந்த ஓவரில் முதல் பந்தில் ஒரு ரன் எடுக்க 2-வது பந்தில், 2-வது பந்தில் ஒரு ரன் அவுட் கிடைத்தது. அடுத்த 2 பந்துகளில் 2 ரன்கள் கி்டைத்தது. ஆனால் 5வது பந்து நோபாலாக வீசியதால், 2 ரன்கள் கிடைத்தது. இதனால் கடைசி 2 பந்துகளில் 2 ரன்கள் எடுத்து தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது.
50 ஓவர்களில் தென்ஆப்பிரிக்க அணி 7 விக்கெட் இழப்பிற்கு 275 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மிக்னோன் 52 ரன்களுடன் களத்தில் இருந்தார். கட்டாய வெற்றியை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு கடைசி ஓவரில் வீசிய நோபால் எமனாக மாறிவிட்டது. இதனால் இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற முடியாமல் ஏமாற்றத்துடன் தொடரில் இருந்து வெளியேறியது.