புதுடெல்லி:
இந்தியாவில் கொரோனா பரவல் தொடங்கியதும் அதை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக கடந்த 2020 ஆண்டு மார்ச் 23ந் தேதி முதல் சர்வதேச விமானங்கள் இயக்கத்திற்கு மத்திய அரசு தடை செய்தது.
கொரோனா தொற்று கட்டுக்குள் வந்த பிறகு சில நாடுகளுக்கான விமான சேவை கட்டுப்பாடுகள் பின்னர் தளர்த்தப்பட்டன.
இந்நிலையில் தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ளதை அடுத்து, இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, வழக்கமான சர்வதேச விமான சேவை இன்று முதல் மீண்டும் தொடங்குகிறது.
27 நாடுகளில் உள்ள 43 இடங்களுக்கு வாரத்திற்கு மொத்தம் 1,466 புறப்பாடுகள் அனுமதிக்கப்பட்டுள்ளன என்று மத்திய விமானப் போக்குவரத்து இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு கோடை கால அட்டவணையின்படி வாரத்திற்கு 3,200க்கும் மேற்பட்ட விமானங்களின் புறப்பாடுகள் இந்தியாவில் இருந்து இயக்கப்படும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்…
வெளிநாடு செல்வோருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி: மத்திய அரசு பரிசீலனை