திங்கள், செவ்வாய் ஆகிய இரண்டுநாட்களுக்கு வங்கிகள் வேலை நிறுத்தம் அறிவித்திருப்பதால் வங்கி சேவைகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கும் அரசின் முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வங்கி ஊழியர்கள் சங்கம் நாடு தழுவிய வேலை நிறுத்த அறிவிப்பை வெளியிட்டுள்ளன.
இதனால் 28 மற்றும் 29 ஆகிய இரண்டு நாட்களுக்கு வாடிக்கையாளர்கள் வங்கி சேவையைப் பெற இயலாது.
இது தவிர நிலக்கரி, எண்ணெய், தொலைத்தொடர்பு, தபால் நிலையம், வருமானவரித்துறை, காப்பீடு துறை போன்ற பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஊழியர்களும் மத்திய அரசின் கொள்கைகளைக் கண்டித்து இரண்டு நாள் வேலை நிறுத்தம் மேற்கொள்ள இருப்பதால் பல்வேறு முக்கிய சேவைகளும் பணிகளும் பாதிக்கும் வாய்ப்புள்ளது.