நீர், உணவு, உடை, இருப்பிடம் இதனையடுத்து இன்று அவசியமான தேவைகளில் ஒன்றாக எரிபொருட்கள் மாறியுள்ளன. ஏற்கனவே ரஷ்யா உக்ரைன் போருக்கு மத்தியில் பல தானியங்களின் விலை, சமையல் எண்ணெய் விலை என பலவும் அதிகரித்துள்ளது.
இதற்கிடையில் மக்கள் அனுதினமும் பயன்படுத்தும் பெட்ரோல், டீசல், கேஸ் விலையும் உயர ஆரம்பித்துள்ளது.
இது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. இந்த விலையேற்றம் இதோடு நின்று விடுமா? என்றால் அதுவும் பெரும் கேள்விக்குறியாகவே உள்ளது.
முகேஷ் அம்பானி ஆசை ஆசையாய் வாங்கி 3 விஷயங்கள்..!
கடும் அதிருப்தி
இதற்கிடையில் 6 நாட்களில் 5 வது முறையாக இன்றும் விலையேற்றம் கண்டுள்ளது. இது பயனர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியினையே ஏற்படுத்தியுள்ளது. இது இன்று மட்டும் பெட்ரோல் மற்றும் டீசலுக்கு முறையே 50 பைசா மற்றும் 55 பைசா அதிகரித்துள்ளது. இந்த ஒரு வாரத்தில் மட்டும் லிட்டருக்கு பெட்ரோல் விலை 3.70 ரூபாயும், டீசல் விலை 3.75 ரூபாயும் அதிகரித்துள்ளது.
பெட்ரோல் விலை நிலவரம்
டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு – ரூ.99.11
கொல்கத்தாவில் லிட்டருக்கு – ரூ.108.53
மும்பையில் – ரூ.113.88
சென்னையில் – ரூ.105
பெங்களூர் – ரூ.104.46
ஹைத்ராபாத் – ரூ.112.37
ஜெய்ப்பூர் – ரூ.111.30
திருவனந்தபுரம் – ரூ.110.05
டீசல் விலை நிலவரம்
டெல்லியில் டீசல் விலை லிட்டருக்கு – ரூ.90.42
கொல்கத்தா – ரூ.93.57
மும்பையில் – ரூ.98.13
சென்னையில் – ரூ.95.10
பெங்களூர் – ரூ.88.67
ஹைத்ராபாத் – ரூ.98.69
ஜெய்ப்பூர் – ரூ.94.71
திருவனந்தபுரம் – ரூ.97.11
சாமானியர்களை பதம் பார்க்க தொடங்கியுள்ளது
எரிபொருள் விலையானது மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடுகின்றதே ஏன்? இது ஒவ்வொரு மாநிலமும் நிர்ணயித்துள்ள வரி விகிதத்தினை அடிப்படையாக கொண்டுள்ளதால், அதனை பொறுத்து மாறுபடுகின்றது. இந்தியாவின் முக்கிய 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில், தொடர்ச்சியாக கடந்த நவம்பர் 4ல் இருந்தே விலை அதிகரிக்காமல் இருந்தது. இது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையானது அதிகரித்த போதிலும் இங்கு விலையில் மாற்றம் காணவில்லை. இதற்கிடையில் தேர்தல் முடிவில் வெளியான சில தினங்களுக்கு பின்பு ஏற்றம் காண ஆரம்பித்த விலையானது, தற்போது தொடர்ந்து ஏற்றம் காண ஆரம்பித்துள்ளது. இது சாமானியர்களின் பாக்கெட்டுகளை பதம் பார்க்க தொடங்கியுள்ளது.
5 times increase in petrol and diesel prices in 6 days
5 times increase in petrol and diesel prices in 6 days/6 நாளில் 5 முறை பெட்ரோல் டீசல் விலை அதிகரிப்பு.. சாமானியர்களை பதம் பார்க்க தொடங்கிய விலையேற்றம்!