இயற்கை நமக்கு தந்த முக்கிய வரப்பிரசாதம் தேன். இது இனிப்பு சுவைக்காக மட்டுமல்லாமல், உடலில் ஏற்படும் பல்வேறு நோய்களுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது. இதனால் தான் பழங்காலத்தில் இருந்தே தேன் முக்கியத்துவம் வாய்ந்த மருத்துவ பொருளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் இந்த தேன், குழந்தைகளுக்கு ஏற்படும் பல்வேறு நோய்களுக்கு தீர்வாக அமைகிறது.
70 வகையான வைட்டமின் சத்துக்களை உள்ளடக்கியுள்ள தேன் மருத்துவத்துறையில் முக்கிய பங்காற்றுகிறது. தேனில் இருக்கும் மருத்துவ குணங்கள் நமது உடலில் ஜீரணப்பாதையில் உறிஞ்சப்பட்டு உடனடியாக ரத்த ஓட்டத்தி் கலந்து செயல்பட தொடங்குகிறது.
தேன் தரும் நன்மைகள்
குழந்தைகள் தினமும் தேன் சாப்பிடும்போது அவர்களுக்கு கால்சியம், மெக்னீசியம் அதிகரிக்கிறது. மேலும் உணவை விரைவில் செரிக்கவைத்து மலச்சிக்கல் வராமல் தடுக்கிறது.
வெங்காய் சாறுடன் தேனை கலந்து சாப்பிட்டால் கண்பார்வை பிரகாசமடையும். தோல் நோய்களுக்கும் தேனை பயன்படுத்தலாம்.
சூடான் வெந்நீரில் எலுமிச்சை சாறு கலந்து அதனுடன் தேனை கலந்து குடித்தால் குமட்டல் வாந்தி ஜலதோஷம் தலைவலி உள்ளிட்ட நோய்கள் தீரும். தேனில் உள்ள குளுக்கோஸ் சத்து ரத்த நாளங்களை சீராக விரிவடைய உதவுகிறது. ரத்த ஓட்டத்தை சீராக்கும். இதயம் தொடர்பான பிரச்சினைகளை தீர்க்கும்.
தேன் முட்டை பால் கலந்து சாப்பிட்டால், ஆஸ்துமா வராமல்’ தடுக்கலாம். மூட்டு வலி உள்ள இடத்தில் தேனை தேய்ததால் குணமாகும். தினமும் தேனை உட்கொண்டால், மூட்டு வலிக்காது தேயாது.
தேனுடன் இஞ்சி பேரீச்சம் பழத்தை ஊறவைத்து சாப்பிட்டடால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்..தூக்கம் ஏற்படுவதற்கு தேன் அருமையான மருந்து ஆகும். தேனையும் மாதுளம் பழ ரசத்தையும் சம அளவு சேர்த்துத் தினமும் சாப்பிட்டால் இருதய நோய்கள் தீரும்.