Vijay:விஜய்யின் மாஸ் போட்டோவை வெளியிட்ட சன் பிக்சர்ஸ்: பீஸ்டே தான்

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில்
விஜய்
,
பூஜா ஹெக்டே
உள்ளிட்டோர் நடித்திருக்கும்
பீஸ்ட்
படம் வரும் ஏப்ரல் மாதம் 13ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸாகவிருக்கிறது.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என்று 5 மொழிகளில் ரிலீஸாகவிருக்கிறது பீஸ்ட்.

இந்நிலையில் வெளியான அரபிக்குத்து மற்றும் ஜாலியோ ஜிம்கானா ஆகிய பாடல்கள் ரசிகர்களை கவர்ந்தது. அரபிக்குத்து பாடலுக்கு பலரும் டான்ஸ் ஆடி, அதை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் பீஸ்ட் படத்தின் இதுவரை கண்டிராத புகைப்படம் இன்று மதியம் 2 மணிக்கு வெளியிடப்படும் என்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டது. அறிவித்தபடி புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.

புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கூறியிருப்பதாவது,

விஜய்யின் அந்த கண்கள், ப்ப்பா சான்சே இல்லை. தளபதி மாஸ். புகைப்படம் சூப்பர். ஏப்ரல் 13ம் தேதிக்காக காத்திருக்கிறோம் என தெரிவித்துள்ளனர்.

முன்னதாக பீஸ்ட் படப்பிடிப்பு தளத்தில் இருந்து விஜய்யின் புகைப்படங்கள் மற்றும் வீடியோ கசிந்து வைரலானது. அதை பார்த்த விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். அந்த கருப்பு ஆட்டை கண்டுபிடித்து தண்டிக்குமாறு நெல்சன் திலீப்குமாரிடம் தெரிவித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மூப்பில்லா தமிழே தாயேவை பாராட்டிய பிரபலம்: அவரை எல்லோருக்குமே பிடிக்குமே

அடுத்த செய்திமூப்பில்லா தமிழே தாயேவை பாராட்டிய பிரபலம்: அவரை எல்லோருக்குமே பிடிக்குமே

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.