சென்னை: அபுதாபியில் முதலமைச்சர் முன்னிலையில், லுலு நிறுவனம் தமிழ்நாட்டில் ரூ. 3,500 கோடி முதலீட்டில் 3 திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
4நாட்கள் அரசு முறை பயணமாக ஐக்கிய அரபு அமிரகம் சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்குள்ள வர்த்தக பொருட்காட்சியில் தமிழக அரங்கை திறந்து வைத்தார். மேலும் அந்நாட்டு தொழில் முதலீட்டாளர்களை சந்தித்து, தமிழகத்துக்கு தொழில்தொடங்க வருமாறு அழைப்பு விடுத்தார். பல நிறுவனங்களுடன் ரூ.1,600 கோடி முதலீடு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தகளில் கையெழுத்திட்டார். அதன்பிறகு மேலும், துபாய் வாழ் தமிழ் மக்களை சந்தித்து உரையாடினார். இந்த நிகழ்ச்சியில் சுமார் 3 ஆயிரம் தமிழர்கள் பங்கேற்றனர்.
இதைத்தொடர்ந்து இரு ஒருங்கிணைந்த தையல் ஆலைகள் (Integrated/ Sewing Plants) நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் உள்பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இதையடுத்து, இன்று அபுதாபி அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் வர்த்த உறவுகளை மேம்படுத்துவது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அப்போது ரூ.3,500 கோடி முதலீட்டில் 3 திட்டங்களுக்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
முன்னதாக அபுதாபியில், முபாதாலா கோபுரத்தில் உள்ள எமிரேட்ஸ் பேலஸில், முபாதாலா நிறுவனத்தின் உட்கட்டமைப்பு நிர்வாக இயக்குநர் சையத் அராரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து, தமிழ்நாட்டில் முதலீடுகள் மேற்கொள்வது தொடர்பாக பேசியபோது, நினைவுப் பரிசு வழங்கினார்.