இந்தியாவில் தற்போது MSME-கள் எளிதான வணிகம் செய்ய பதிவு செய்யும் பல விதிமுறைகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. இதற்கிடையில் உதயம் போர்டலில் பதிவு செய்யப்பட்ட 28,684 மைக்ரோ எண்டர்பிரைசஸ் மற்றும் 3679 சிறு நிறுவனங்கள் முறையே, சிறு வணிகங்கள் மற்றும் நடுத்தர வணிகங்களாக வளர்ந்துள்ளன.
இது குறித்த அரசுத் தகவல்களில் ஜூன் 26, 2020ல் தொழிற்துறை அமைச்சகம் சிறு குறு மற்றும் நடுத்தர (MSME) தொழில்களுக்கான வரையறையை மாற்றியமைத்தது.
இதனைத் தொடர்ந்து தான் ஜூலை 1, 2020ல் முதல் MSMEக்கான பதிவு உதயம் போர்ட்டல் தொடங்கப்பட்டது.
எம்எஸ்எம்இ-க்களுக்கு உதவ உலக வங்கி 0 மில்லியன் ஒப்புதல்..!
எத்தனை நிறுவனங்கள் பதிவு
மார்ச் 2022 நிலவரப்படி, 79.27 லட்சம் MSME-க்கள் பதிவு செய்யப்பட்டன. அவற்றில் 75.41 லட்சம் குறு நிறுவனங்கள், 3.50 லட்சம் சிறு நிறுவனங்கள் மற்றும் 35,773 நடுத்த நிறுவனங்களாக பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் வளர்ந்து வரும் பெரிய நிறுவனங்களின் பட்டியல் வெளியிடப்படவில்லை.
மைக்ரோ எண்டர்பிரைசஸ்
MSME-க்களுக்கு அரசாங்கம் வழங்கும் திட்டங்கள் மற்றும் முன்முயற்சிகளில் இருந்து அதிக பயனாளர்கள் பயனடைய MSME அதன் வரையறை திருத்தியது. இதில் மைக்ரோ எண்டர்பிரைசஸ் நிறுவனங்களுக்கு 1 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 5 கோடி ரூபாய் டர்ன் ஓவர் எனவும் உயர்த்தப்பட்டது.
சிறு நிறுவனங்கள்
இதே சிறு நிறுவனங்களுக்கான முதலீட்டு வரம்பானது 10 கோடி ரூபாயும், டர்ன் ஓவர் 20 கோடி ரூபாயாகவும் உயர்த்தப்பட்டது. இதே நடுத்தர நிறுவனங்களுக்காக முதலீட்டு வரம்பு 50 கோடி ரூபாயாகவும், டர்ன் ஓவர் 250 கோடி ரூபாயும் அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த 2006ல் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மேம்பாட்டு சட்டம் உருவாக்கப்பட்டு 14 ஆண்டுகள் கழித்து இந்த திருத்தங்கள் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கடன்
MSME வரம்பில் 2.5 கோடி மொத்த சில்லறை வர்த்தகர்களை உள்ளடக்கும் வகையில், கடந்த ஆண்டு ஜூலை மாதம் MSME தளத்தை அரசு விரிவுபடுத்தியது. எவ்வாறயினும் இந்த வர்த்தகர்களுக்கான நன்மைகள் முன்னுரிமை கடன்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
Almost 30,000 micro enterprises scaled up to become small business
Almost 30,000 micro enterprises scaled up to become small business/அரசின் முயற்சி வீண்போகவில்லை.. சுமார் 30,000 குறு நிறுவனங்கள் சிறு நிறுவனங்களாக வளர்ச்சி..!