டோனியர் கண்காணிப்பு விமானங்களை இலங்கை கொள்வனவு செய்ய வேண்டும் என நிர்ப்பந்திப்பதன் மூலம் இலங்கையின் பாதுகாப்பு கட்டமைப்பிற்குள் இந்தியா ஊடுறுவ முயல்கிறது என இலங்கையை சேர்ந்த பாதுகாப்பு ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் தேசிய பாதுகாப்பிற்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய யோசனைகளுக்கு அமைச்சரவை அவசர அவசரமாக அனுமதி வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் டோனியர் கண்காணிப்பு விமானம் இலங்கையில் செயற்படும் இந்தியாவின் சொத்து, இது எமது அமைப்பிற்குள், கடல்கண்காணிப்பிற்குள், பாதுகாப்பு அமைச்சிற்குள், விமானப்படைக்குள் ஊடுறுவுவதற்கான வழிமுறையாகும் எனவும் ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான மேலும் பல தகவல்களுடன் இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம் தொகுப்பு,