லாஸ் ஏஞ்சலஸ் : இந்த ஆண்டிற்கான, 94வது ‘ஆஸ்கர்’ விருது வழங்கும் விழா, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில், கோலாகலமாக துவங்கியது. சிறந்த நடிகருக்கான விருதினை வில் ஸ்மித் வென்றார்.
இன்றயை விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதன்படி சிறந்த துணை நடிகருக்கான விருதினை ‛டிராய் கோட்சர்’ பெற்றார்.
சிறந்த துணை நடிகை விருதினை ‛அரியானா டிபோஸ்’ வென்றார் ‛என்கான்டோ’ படத்திற்கு சிறந்த அனிமேஷன் விருது கிடைத்துள்ளது.
சிறந்த பாடலுக்கானா விருதை ஜேமஸ்பாண்ட் நடத்த “நோ டைம் டூ டை ” க்குகிடைத்துள்ளது.
கிங்ரிசர்டு திரைப்படத்தில் நடித்த வில் ஸ்மித்துக்கு சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது.
தி பவர் ஆப் தி டாக் படத்தை இயக்கியதற்காக சிறந்த இயக்குனராக ஜேம் கேம்பியன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சிறந்த நடிகர், நடிகை, சிறந்த திரைப்படம்
சிறந்த நடிகருக்கான விருதை, ‘கிங் ரிச்சர்ட்’ என்ற திரைப்படத்திற்காக நடிகர் வில் ஸ்மித் வென்றுள்ளார். தி ஐஸ் ஆப் டாமி பயே என்ற திரைப்படத்தில் நடித்த ஜெஸ்சிகா சாஸ்டெய்ன் சிறந்த நடிகையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். கோடா என்ற திரைப்படம் சிறந்த திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டது.
சிறந்த அனிமேஷன் திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதை தட்டிச் சென்றது என்கான்டோ (Encanto)
பைரன் ஹோவார்ட் மற்றும் ஜேம்ஸ் புஷ் இணைந்து இந்த படத்தை இயக்கி இருந்தனர்.
ரயா அண்ட் தி லாஸ்ட் டிராகன், லூகா, ஃப்ளீ, தி மிட்செல் vs தி மெஷின்ஸ் உள்ளிட்ட படங்கள் நாமினேட் செய்யப்பட்டிருந்தன.
6 விருதுகள் பெற்ற படம்
ஒளிப்பதிவு, இசை, விஷூவல் எஃபெக்ட்ஸ், ஒரிஜினல் ஸ்கோர், படத்தொகுப்பு, புரொடக்சன் டிசைனிங் ஆகிய பிரிவுகளில் டியூன் (DUNE) திரைப்படத்திற்கு 6 விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.
சிறந்த ஒளிப்பதிவாளருக்கான ஆஸ்கர் விருதை DUNE படத்திற்காக கிரேக் ஃபிரேசர் வென்றார்.
சிறந்த இசையமைப்பாளருக்கான ஆஸ்கர் விருதை DUNE படத்திற்காக 5 பேர் பெற்றுக்கொண்டனர்..
மேக் ரூத், மார்க் மங்கினி, தியோ கிரீன், டக் ஹெம்பில் மற்றும் ரான் பார்ட்லெட் ஆகியோருக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான விருது.
இந்தியருக்கு விருது
சிறந்த விஷுவல் எஃபெக்ட்டுக்கான ஆஸ்கர் விருது DUNE படத்திற்காக 4 பேர் பெற்றுக்கொண்டனர்.இந்த நால்வரில் நமித் மல்கோத்ரா என்னும் இந்தியரும் ஒருவர். லண்டனை தலைமையிடமாக கொண்டுள்ள இவரது நிறுவனம், டியூன் படத்திற்கு விஷூவல் எபெக்ட்களை செய்துள்ளது. இவரது நிறுவனம் வாங்கும் 7வது ஆஸ்கர் விருது இதுவாகும்.
இவர் சமீபத்தில் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ஆர்.ஆர்.ஆர் படத்திலும் பணியாற்றி உள்ளார். பாலிவுட்டில் ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் நடிப்பில் உருவாகி வரும் பிரம்மாஸ்திரா படத்துக்கும் இவரது நிறுவனம் தான் விஷுவல் எபெக்ட்ஸ் பணிகளை மேற்கொண்டு வருகிறது.