ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கய் லாவ்ரோ இந்தியா வரவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. உக்ரைனுடன் போர் தொடங்கிய பின்னர் ரஷ்ய அமைச்சர் வருவது முதல்முறையாகும்.
போரின் காரணமாக கடுமையான பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டதால் நிதி நெருக்கடியை ரஷ்யா சந்தித்து வருகிறது. இந்தியாவுடன் ரூபாய் -ரூபிள் பரிவர்த்தனையில் வர்த்தக முறையை ஏற்படுத்துவது உள்பட பல்வேறு முக்கிய விவகாரங்களுக்கு பேச்சுவார்த்தை நடத்த ரஷ்ய அமைச்சர் இந்தியா வரத் திட்டமிட்டுள்ளார்.
உக்ரைன் போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் நாடாளுமன்றத்தில் வலியுறுத்திய போதும் ரஷ்யாவுக்கு எதிரான ஐநா.சபை வாக்கெடுப்புகளில் இந்தியா பங்கேற்காமல் தவிர்த்தது.