உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த நிலையில், மேற்கத்திய நாடுகள் அடுத்தடுத்துத் தடை விதித்து மொத்த வர்த்தகச் சந்தையும் பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் உக்ரைன் மீதான போரை எதிர்க்கப் பல நாடுகள் இருப்பது போல், உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரை ஆதரிக்கவும் பலர் உள்ளனர்.
இந்த நிலையில் ரஷ்யாவின் போரை ஆதரிப்போர் Z என்று எழுத்தைச் சமுக வலைத்தளத்தில் அதிகளவில் பயன்படுத்தி வரும் நிலையில், தற்போது சிவிஸ் நிறுவனத்திற்கு முக்கியமான பிரச்சனை உருவெடுத்துள்ளது.
சுவிஸ் வங்கியில் பதுக்கப்பட்ட 214 பில்லியன் டாலர் கருப்புப் பணம்.. ரஷ்ய பணக்காரர்களுக்கு செக்..!
சூரிச் இன்சூரன்ஸ்
சுவிஸ் நாட்டின் முன்னணி மற்றும் பிரபலமான இன்சூரன்ஸ் நிறுவனமாக விளங்கும் சூரிச் இன்சூரன்ஸ், தற்போது ரஷ்யா – உக்ரைன் போர் காரணமாக அதிகப்படியான பாதிப்பை எதிர்கொண்டு வருகிறது. ரஷ்யா – உக்ரைன் போருக்கு எவ்விதமான தொடர்பும் இல்லாத நிலையில் சுவிஸ் நிறுவனம் பாதிக்கப்பட்டு உள்ளது.
சுவிட்சர்லாந்து
சுவிட்சர்லாந்து நாட்டைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் சூரிச் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் லோகோ Zurich என்பதற்காக Z என்ற எழுத்தை லோகோவாக வைத்திருந்தது. தற்போது ரஷ்யா – உக்ரைன் போர் ஆதரவு சின்னமாக Z மாறியுள்ளதை அடுத்து இதை மொத்தமாக நீக்கியுள்ளது.
Z லோகோ
ரஷ்யா – உக்ரைன் போர் ஆதரவாளர்கள் உலக நாடுகளிடம் இருந்து கடுமையான எதிர்ப்புகளை எதிர்கொண்டு வரும் நிலையில், இதில் சிக்கக் கூடாது என்பதை மனதில் வைத்துக் கொண்டு Z லோகோ-வை சூரிச் இன்சூரன்ஸ் நீக்கியுள்ளது.
ரஷ்யாவின் போருக்கு ஆதரவு
உக்ரைன் நாட்டில் நிறுத்தப்பட்டு உள்ள ராணுவ வாகனங்கள், உக்ரைன் போருக்கு ஆதரவு தெரிவிக்கும் ரஷ்ய மக்கள், ரஷ்ய அரசுக்கு ஆதரவாக விளங்கும் அமைப்புகள் அனைத்தும் Z என்ற எழுத்தை கொண்டு தான் தனது ஆதரவைக் காட்டி வருகிறது.
வெறுப்புணர்வு
இந்தப் போரின் காரணமாக வெளிநாடுகளில் இருக்கும் ரஷ்யா மக்கள் மீதும் அதிகப்படியான வெறுப்புணர்வு காட்டப்படுகிறது. இந்த நிலையில் வெளிநாட்டில் இருக்கும் பல ரஷ்ய பணக்காரர்கள், தொழிலதிபர்கள் தத்தம் நாடுகளின் அரசு தீவிரமாகக் கண்காணித்து வருகிறது. இதேபோல் பலர் மீது தடையும் விதிக்கப்பட்டு உள்ளது.
Swiss-based Zurich Insurance removes Z logo which symbolizes support for Ukraine war
Swiss based Zurich Insurance removes Z logo which symbolizes support for Ukraine war இந்த ‘Z’ எழுத்து இவ்வளவு பெரிய பிரச்சனையா..? #Swiss