இஸ்லாமாபாத் : பாக்.பிரதமர் இம்ரான் அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்க்கட்சித்தலைவர் பாராளுமன்றத்தில் கொண்டு வந்தார். இந்நிலையில் பார்லிமென்ட் மார்ச் 31 தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பாகிஸ்தானில் முன்னாள் கிரிக்கெட் கேப்டனும், பி.டி.ஐ., எனப்படும் பாகிஸ்தான் தெஹ்ரிக் – இ – இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான் கான் பிரதமராக உள்ளார். கடந்த 2018ல் நடந்த தேர்தலில், கூட்டணிக் கட்சிகளின் ஆதரவால், அவர் பிரதமரானார்.
இந்நிலையில், கடும் நிதி நெருக்கடியில் பாகிஸ்தான் தள்ளாடுகிறது. இந்த நிதி நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வுக்கு பிரதமர் இம்ரான் கானின் செயல்பாடுகளே காரணம் என, எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.இதையடுத்து இம்ரான் கான் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை பார்லிமென்டில் தாக்கல் செய்தன.
கடந்த வாரத்தில் இதன் மீது ஓட்டெடுப்பு நடக்கவிருந்த நிலையில் ஒத்தி வைக்கப்பட்டது. அதன்படி, பார்லிமென்டில் இன்று விவாதமும், ஓட்டெடுப்பும் நடக்க உள்ளது.
இதையடுத்து எதிர்க்கட்சி தலைவர் ஷப்பாஸ் ஷெ ரீப், இம்ரான் கான் அரசு மீது நம்பிக்கையில்லாத தீர்மானத்தை கொண்டு வந்து விவாதம் நடத்தினார்.
எதிர்க்கட்சிகளுடன், கூட்டணிக் கட்சியினர் மற்றும் சொந்தக் கட்சியினரும் போர்க் கொடி துாக்கியுள்ளதால், நம்பிக்கையில்லா தீர்மானத்தை முறியடித்து, நம் அண்டை நாடான பாகிஸ்தானின் பிரதமர் இம்ரான் கான், பதவியை தக்க வைப்பாரா என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Advertisement