உக்ரைனில் ரஷ்ய உளவாளி கைது… உக்ரைனை பிளவுபடுத்த நினைக்கிறதா ரஷ்யா? மேலும் செய்திகள்

அணு ஆயுத சோதனைக்கு தயாராகும் வடகொரியா: தென்கொரியா எச்சரிக்கை

வடகொரியா அணு ஆயுத சோதனைக்கு தயாராகி வருவதாக தென்கொரியா எச்சரித்துள்ளது. வடகொரியா அணு ஆயுதங்களை முழுமையாக கைவிட்டால்தான் அந்த நாட்டின் மீதான பொருளாதார தடைகளை திரும்பப்பெற முடியும் என அமெரிக்கா தெரிவித்தது.

ஆனால் இதனை ஏற்க மறுத்த வடகொரியா பேச்சுவார்த்தையை முறித்துக்கொண்டு மீண்டும் ஏவுகணை சோதனைக்கு திரும்பியது. எனினும் குறுகிய மற்றும் நடுத்தர தூர ஏவுகணைகளை மட்டுமே வடகொரியா சோதித்து வந்தது.

இந்த சூழலில் 5 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக கடந்த 24-ந்தேதி நீண்ட தூரம் செல்லும் சக்தி வாய்ந்த ஏவுகணையை வடகொரியா சோதித்தது. அமெரிக்கா வரை சென்று தாக்கும் திறன்கொண்ட ‘ஹவாசோங் 17’ ஏவுகணை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டதாக வடகொரியா அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

வடகொரியா மீண்டும் நீண்ட தூர ஏவுகணை சோதனைகளுக்கு திரும்பியுள்ளது உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. வடகொரியா மீது கடுமையான பொருளாதார தடைகளை விதிக்க வேண்டும் என ஐ.நா.விடம் அமெரிக்கா வலியுறுத்தி உள்ளது.

இந்த நிலையில் வடகொரியா அடுத்தக்கட்டமாக அணு ஆயுத சோதனைக்கு தயாராகி வருவதாக தென்கொரியா எச்சரித்துள்ளது. அந்த நாட்டின் வடக்கு ஹம்கியோங் மாகாணத்தில் உள்ள புங்கியே-ரி அணு ஆயுத சோதனை தளத்தில் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக தென்கொரியா அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ரஷ்யாவில் ஆட்சி மாற்றம் ஏற்படுமா?

ரஷியாவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவது ஜோ பைடனின் நோக்கம் அல்ல என்று ஜெர்மனி பிரதமர் ஓலாப் ஸ்கோல்ஸ் கூறியுள்ளார்.

ரஷ்யாவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதை நேட்டோவோ அல்லது அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனோ நோக்கமாக கொண்டிருக்கவில்லை என்று ஜெர்மனி பிரதமர் ஓலாப் ஸ்கோல்ஸ் கூறியுள்ளார்.

முன்னதாக, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், ரஷ்ய அதிபர் புதின் குறித்து பேசும்போது, “புதின் தொடர்ந்து அதிகாரத்தில் இருக்க முடியாது” என்று கூறினார்.

இந்நிலையில், ஜெர்மனி பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

உக்ரைன் ஏவுகணை தாக்குதல்: ரகசியமாக புகைப்படங்கள் எடுத்த ரஷ்ய உளவாளி கைது

உக்ரைனில் உள்ள லிவிவ் நகரம், நேற்று முன்தினம் ரஷியாவின் 2 ராக்கெட் தாக்குதலால் நிலை குலைந்தது.

இந்நிலையில் ஒரு ராக்கெட் பறந்து வந்து தாக்குவதைப் படம் பிடித்த ரஷ்ய உளவாளி என சந்தேகப்படும் ஒருவரை உள்ளூர் போலீசார் பிடித்தனர்.

இதுகுறித்து அந்த மாகாண கவர்னர் மேக்சிம் கோசிட்ஸ்கி கூறும்போது, “பிடிபட்ட நபர், ரஷ்ய ராக்கெட் தாக்குதல் இலக்கை படம் பிடித்துள்ளார். மேலும், இந்த பிராந்தியத்தில் உள்ள சோதனைச் சாவடிகளையும் அவர் தனது செல்போனில் படம் பிடித்துள்ளார். இந்தப் படங்களை அவர் ரஷ்ய செல்போன் எண்களுக்கு அனுப்பி வைத்துள்ளார்” என குறிப்பிட்டார். மேலும் அந்த நபரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.

உக்ரைனை பிளவு படுத்த நினைக்கிறது ரஷ்யா

உக்ரைனை கொரியா போல் இரு நாடுகளாக பிளவுப்படுத்த ரஷ்யா திட்டம் தீட்டி வருகிறது என்று உக்ரைன் ராணுவ உளவுப் பிரிவுத் தலைவர் தெரிவித்தார்.

உக்ரைனில் கடந்த 4 வாரங்களுக்கு மேலாக ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.
இருப்பினும், எந்தவொரு முக்கியமான நகரையும் அந்நாட்டு ராணுவத்தினால் கைப்பற்ற முடியவில்லை.

இந்நிலையில், கொரியா, தென்கொரியா-வடகொரியா என பிரிந்ததுபோல உக்ரைனை இரண்டாக பிளவுப் படுத்த ரஷ்ய சதித்திட்டம் தீட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உக்ரைன் மேற்கு பகுதியை குறி வைக்கிறதா ரஷ்யா?

இதனிடையே, ரஷ்ய ராணுவத்தை விரட்டி அடிக்க மேலும் ராணுவத் தளவாடங்களை கொடுத்து உதவுமாறு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மேற்கத்திய நாடுகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.