ஐபிஎல் 2022 – மில்லர், தெவாட்டியா அதிரடியில் லக்னோவை வீழ்த்தியது குஜராத்

மும்பை:
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் குஜராத்-லக்னோ அணிகள் மோதின. டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த லக்னோ அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 158 ரன்கள் எடுத்தது. தீபக் ஹூடா 55 ரன், ஆயுஷ் பதோனி 54 ரன் எடுத்தனர்.
குஜராத் சார்பில் முகமது ஷமி 3 விக்கெட் எடுத்தார். வருண் ஆரோன் 2 விக்கெட், ரஷித் கான் ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஷுப்மான் கில் டக் அவுட்டானார். அடுத்து இறங்கிய விஜய் சங்கர் 4 ரன்னில் அவுட்டானார். கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 28 பந்தில் ஒரு சிகசர், 5 பவுண்டரி உள்பட 33 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் மேத்யூ வேட் 30 ரன்னில் வெளியேறினார். 
குஜராத் அணி ஒரு கட்டத்தில் 78 ரன்னுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. அடுத்து இறங்கிய டேவிட் மில்லர், ராகுல் தெவாடியா அதிரடியாக ஆடினர். மில்லர் 30 ரன்னில் வெளியேறினார்.
இறுதியில், குஜராத் அணி 5 விக்கெட் இழப்புக்கு வெற்றிக்கு தேவையான  ரன்களை எடுத்து ஐபிஎல் தொடரில் முதல் வெற்றியைப் பதிவு செய்தது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.