இந்தியாவின் முன்னணி தங்க நகை விற்பனை நிறுவனமான கல்யாண் ஜூவல்லர்ஸ் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் வேளையில், முன்னாள் இந்திய தலைமை கணக்குத் தணிக்கையாளரான வினோத் ராய்-ஐ சேர்மன் மற்றும் தனிப்பட்ட நிர்வாக அதிகாரமில்லாத இயக்குனராக நியமிக்கக் கல்யாண் ஜூவல்லர்ஸ் நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது.
மேலும் கல்யாண் ஜூவல்லர்ஸ் நிர்வாக இயக்குனராகத் தொடர்ந்து டி.எஸ். கல்யாணராமன் இயங்குவார்.
டைட்டன், கல்யாண் ஜூவல்லர்ஸ் போட்டியாக களமிறங்கும் ஜோஸ் ஆலுக்காஸ்.. எப்படி தெரியுமா?
கல்யாண் ஜூவல்லர்ஸ்
கல்யாண் ஜூவல்லர்ஸ் இந்தியாவின் முக்கியமான நகரங்கள் மற்றும் மேற்கு ஆசிய பகுதிகளில் அதிகளவிலான வர்த்தகத்தை உருவாக்கியுள்ளது. இந்தியா மற்றும் வெளிநாடுகளில் சுமார் 8000 ஊழியர்களை வைத்துக்கொண்டு பிரம்மாண்ட வர்த்தகத்தை உருவாக்கியுள்ளது.
லாபம் வருவாய்
டிசம்பர் 2021 காலாண்டில் கல்யாண் ஜூவல்லர்ஸ் சுமார் 2,880.09 கோடி ரூபாய் அளவிலான வருமானத்தைப் பெற்று, சுமார் 118.37 கோடி ரூபாய் லாபத்தைப் பதிவு செய்துள்ளது. சுமார் 5 நாடுகள் 146 ஷோரூம்கள் உடன் பிரம்மாண்ட வர்த்தகச் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியுள்ளார் டி.எஸ். கல்யாணராமன்.
வினோத் ராய்
இந்நிலையில் 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றைப் பகிர்மானத்தில் 1 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான நஷ்டம் அரசு ஏற்பட்டு உள்ளது எனச் சிஏஜி குற்றச்சாட்டை முன்வைத்தது, வினோத் ராய் தலைமையில் தான் நடந்தது.
திடிர் நியமனம்
இந்தியாவின் 11வது தலைமை கணக்குத் தணிக்கையாளரும், ஐக்கிய நாடுகள் சபையின் வெளிப்புற தணிக்கையாளர்கள் குழுவின் தலைவருமான வினோத் ராய் திடீரென கல்யாண் ஜூவல்லர்ஸ் சேர்மன் ஆகத் திடீரென நியமிக்கப்பட்டு உள்ளது பலருக்கும் அதிர்ச்சி அளிக்கும் விஷயமாக உள்ளது.
செபி மற்றும் பங்குதாரர்கள்
வினோத் ராய் நியமனத்திற்கு கல்யாண் ஜூவல்லர்ஸ் நிர்வாகக் குழு ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ள நிலையில் இவருடைய நியமனத்தைப் பங்குச்சந்தை கட்டுப்பாடு ஆணையம் மற்றும் பங்குதாரர்கள் குழு ஒப்புதல் அளிக்கப்பட வேண்டும். அதன் பின்பு தான் கல்யாண் ஜூவல்லர்ஸ் நிறுவனத்தில் வினோத் ராய்-ன் பணிகள் துவங்கும்.
வினோத் ராய் கருத்து
இந்த நியமன ஒப்புதல் குறித்து வினோத் ராய் கூறுகையில்: கல்யாண் ஜூவல்லர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றுவது எனக்குக் கிடைத்த பாக்கியமாகும் என்றும், கல்யாண் ஜூவல்லர்ஸ் அதன் பங்குதாரர்களிடையே அதிகப்படியான நம்பிக்கையை உருவாக்கியுள்ளது. மேலும் இந்நிறுவனத்தின் வணிகத்தை நெறிமுறை உடனும், வெளிப்படையான முறையிலும் நடத்துகிறது எனக் கூறியுள்ளார்.
Kalyan Jewellers appoints ex-CAG Vinod Rai as its chairman
Kalyan Jewellers appoints ex-CAG Vinod Rai as its chairman கல்யாண் ஜூவல்லர்ஸ் சேர்மனாக முன்னாள் CAG வினோத் ராய் நியமனம்..!