குப்பையைத் தேடியபோது கிடைத்த பொக்கிஷம்: பிரித்தானிய பெண்ணுக்கு அடித்த அதிர்ஷ்டம்


கடற்கரை ஒன்றில் சும்மா பொழுதுபோகாமல் சிப்பி முதலான பொருட்களை சேகரித்துக்கொண்டிருந்த பெண்ணுக்கு திடீர் அதிர்ஷ்டம் அடித்துள்ளது.

Jennie Fitzgerald (38), வடக்கு Norfolk கடற்கரையில் சிப்பி போன்ற பொருட்களை சேகரித்துக்கொண்டிருந்திருக்கிறார். அப்போது, அவர் கண்களில் மரப்பெட்டி ஒன்று சிக்கியுள்ளது.

அதை அவர் வீட்டுக்குக் கொண்டு வர, அவரது கணவரான James (40), அவர்களுடைய பிள்ளைகளான Harrison (9) மற்றும் Darcey (6) ஆகியோர் இணைந்து அந்தப் பெட்டியை சுத்தம் செய்துள்ளார்கள்.

பின்னர் அனைவருமாக பெட்டியைத் திறந்து பார்க்க, அதற்குள் 100 பழங்கால நாணயங்கள், வாசனை திரவிய போத்தல் ஒன்று, ஒரு சாவி மற்றும் சில பழங்காலப் பொருட்கள் இருந்துள்ளன.

அந்த பெட்டி யாருக்குச் சொந்தமானது என்பதை அறிவதற்காக, Norfolk கவுன்சிலிடம் அந்தப் பெட்டியை ஒப்படைக்க இருக்கிறது அந்தக் குடும்பம்.

ஆனால், அதற்குள் Jennie, James தம்பதியரின் பிள்ளைகள், தாங்கள் பெரிய பணக்காரர்களாகப் போவதாக கற்பனை செய்யத் தொடங்கிவிட்டார்களாம்.

வெறும் குப்பையைத்தான் சேகரிக்கச் சென்றேன், ஆனால் எனக்கு ஒரு புதையல் பேழை கிடைத்தது என்கிறார் Jennie.
 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.