பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இம்ரான் கான் அரசு மீது இன்று எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வருகின்றன.
172 உறுப்பினர் ஆதரவுடன் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ள பாகிஸ்தானின் ஆளும் கட்சிக்கு 155 உறுப்பினர்களே உள்ளனர்.
இம்ரான்கானின் சொந்த கட்சி உறுப்பினர்கள் சிலரும் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்கக்கூடும் என நம்பப்படுவதால் இம்ரான்கான் அரசு கவிழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், எதிர்க்கட்சிகளுக்கு தனது பலத்தை காட்டும் விதமாக இஸ்லாமாபத்தில் பிரமாண்ட பொதுக்கூட்டத்தை நடத்திய இம்ரான்கான் பர்வேஸ் முஷாரப், நவாஸ் ஷெரீப் ஆகியோரை ஊழல் பெருச்சாளிகள் என்று சாடினார்.
கடந்த 30 ஆண்டுகளில் பாகிஸ்தானின் சொத்துகளை கொள்ளையடித்து வெளிநாடுகளில் பல மில்லியன் டாலர்களை முதலீடு செய்து வருவதாகவும் இம்ரான் கான் குற்றம் சாட்டினார்.
இதற்கு பதிலளித்த நவாஸ் மனைவியான மரியம் நவாஸ் பாகிஸ்தானின் கோதுமை சர்க்கரை, நெய் எல்லாம் உண்டு கொழுத்த பெருச்சாளி இம்ரான் கான் தான் என்று கூறியுள்ளார்.