பணஜி : கோவா மாநில முதல்வராக, பா.ஜ.,வின் பிரமோத் சாவந்த் நேற்று இரண்டாவது முறையாக பதவி ஏற்றார்.கோவாவில், சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், மொத்த முள்ள 40 இடங்களில், பா.ஜ., 20 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியானது. இரண்டாவது முறைபெரும்பான்மைக்கு, 21 இடங்கள் தேவை என்ற நிலையில், மஹாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சியின் இரண்டு எம்.எல்.ஏ.,க்கள், பா.ஜ.,வுக்கு ஆதரவு தந்தனர்.
மேலும், மூன்று சுயேச்சை எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவும் பா.ஜ.,வுக்கு கிடைத்தது.இதையடுத்து, வடக்கு கோவாவின் சங்கலிம் தொகுதியில் வெற்றிபெற்ற பிரமோத் சாவந்த், பா.ஜ., சட்டசபை கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில், கோவா மாநிலத்தின் முதல்வராக, பிரமோத் சாவந்த், 48, இரண்டாவது முறையாக நேற்று பதவி ஏற்றார்.அவருக்கு, கவர்னர் ஸ்ரீதரன் பிள்ளை பதவி பிரமாணம் செய்து வைத்தார். முதல்வர் சாவந்த் உடன் எட்டு பேர் அமைச்சர்களாக பதவி ஏற்றனர்.
வாழ்த்துதலைநகர் பணஜிக்கு அருகே, பம்போலிம் பகுதியில் உள்ள டாக்டர் ஷ்யாமா பிரசாத் முகர்ஜி அரங்கத்தில் நடந்த இந்த பதவியேற்பு விழாவில், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பங்கேற்றனர்.மேலும், ஹிமாச்சல பிரதேச கவர்னர் ராஜேந்திர அர்லேகர், பா.ஜ., தேசிய தலைவர் நட்டா, மஹா., முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் ஆகியோரும் பங்கேற்றனர்.கோவா முதல்வராக, இரண்டாவது முறையாக பதவி ஏற்றுள்ள பிரமோத் சாவந்த்துக்கு, தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Advertisement