நிகரகுவா நாட்டின் செர்ரொ நெக்ரோ ஏரிமலையின் சரிவில் சுற்றுலா பயணிகளுக்கான சறுக்கு விளையாட்டுகள் 2 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
2 ஆயிரத்து 400 அடி உயரம் கொண்ட தீ பிழம்பு மற்றும் புகையை கக்காத இந்த எரிமலையின் உச்சியில் இருந்து சாம்பல் படர்ந்த சரிவில் சறுக்கியபடியே கீழே வர 40 வினாடிகள் மட்டுமே ஆகிறது.
இயற்கையாக அமைந்துள்ள சரிவில் சறுக்கி விளையாடும் அனுபவத்தை பெற ஆண்டுதோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கே வருவதாக கூறப்படும் நிலையில், கொரோனா காராணமாக 2 ஆண்டுகள் பயணிகளின் வருகை குறைந்தது.
ஒருமுறை மேலிருந்து சறுக்க நபர் ஒருவருக்கு சுமார் 30 அமெரிக்க டாலர் வசூலிக்கப்பட்டுவதாக கூறப்படும் நிலையில், எரிமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள குறு நகரங்களில் உள்ள வியாபாரிகளின் வருவாய் இந்த இடத்துக்கு வரும் சுற்றுலா பயணிகளை சார்ந்திருக்கிறது.