இந்திய பங்கு சந்தைகள் நடப்பு வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று சற்று சரிவில் காணப்படுகின்றன. இது இன்னும் சரியுமா? கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன? இன்று கவனிக்க வேண்டிய பங்குகள் என்ன? ஏன் இந்த சரிவுக்கு என்ன காரணம் வாருங்கள் பார்க்கலாம்.
வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் சந்தையானது சரிவிலேயே காணப்படுகின்றது. தொடக்கத்தில் இது பெரியளவில் மாற்றம் இல்லாவிட்டாலும், தற்போது நல்ல சரிவில் காணப்படுகிறது.
மீடியம் டெர்மில் 25% வரையில் லாபம் கொடுக்கலாம்.. மோதிலால் ஆஸ்வாலின் பலே பரிந்துரை!
கடந்த அமர்வில் அமெரிக்க சந்தைகள் சற்று ஏற்றத்திலேயே முடிவடைந்திருந்தாலும், அது ஆசிய சந்தைகளில் எதிரொலிக்கவில்லை. மாறாக ஆசிய சந்தைகள் பலவும் இன்று சரிவிலேயே காணப்படுகின்றன. இது சீனாவில் தொடர்ந்து கொரோனாவின் தாக்கம் அதிகரித்து கொண்டு வரும் நிலையில், அங்கு பல நகரங்களில் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது. சுமார் 25 மில்லியன் மக்கள் லாக்டவுனால் முடங்கியுள்ளதாகவும் தரவுகள் கூறுகின்றன.
ப்ரீ ஓபனிங்கிலேயே குழப்பம்
இன்று ப்ரீ ஓபனிங் சந்தையிலேயே இந்திய பங்கு சந்தைகள் பெரியளவில் மாற்றம் காணவில்லை. குறிப்பாக சென்செக்ஸ் 18.26 புள்ளிகள் அதிகரித்து 57,380.46 புள்ளிகளாகவும், நிஃப்டி 76 புள்ளிகள் குறைந்து, 17077 புள்ளிகளாகவும் குழப்பத்திலேயே இருந்தது. இது அப்போதே சென்செக்ஸ் சற்று ஏற்றத்திலும், நிஃப்டி சரிவிலும் காணப்பட்டது.
தொடக்கம் எப்படி?
இதனையடுத்து சென்செக்ஸ் தொடக்கத்தில் பெரியளவில் மாற்றமின்றி 5.67 புள்ளிகள் அதிகரித்து, 57,367.87 புள்ளிகளாகவும், நிஃப்டி 6.80 புள்ளிகள் அதிகரித்து, 17,159.80 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதற்கிடையில் 1271 பங்குகள் ஏற்றத்திலும், 778 பங்குகள் சரிவிலும், 129 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.
கவனிக்க வேண்டிய பங்குகள்
இன்று கவனிக்க வேண்டிய பங்குகள் லிஸ்டில் பிவிஆர் மற்றும் ஐனாக்ஸ் உள்ளன. இவை இரண்டும் இணைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த நிறுவன பங்குகள் இன்று சந்தையில் ஏற்றம் காணலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இது இன்று கவனிக்க வேண்டிய் பங்குகளில் ஒன்றாக உள்ளது.
இது தவிர பார்தி ஏர்டெல், இமாமி, சாகர் சிமெண்ட்ஸ், கோத்ரேஜ் ப்ராபர்டீஸ், விப்ரோ உள்ளிட்ட பங்குகளும் கவனிக்க வேண்டியவைகளாக உள்ளன.
இன்டெக்ஸ் நிலவரம்
இன்று பிஎஸ்இ மெட்டல்ஸ், பிஎஸ்இ ஆயில் & கேஸ் குறியீடுகளை தவிர மற்ற அனைத்து குறியீடுகளும் சரிவிலேயே காணப்படுகின்றன. எனினும் பிஎஸ்இ கன்சியூமர் டியூரபிள் குட்ஸ் மட்டும் 1% மேலாக சரிவில் காணாப்படுகின்றது. மற்ற அனைத்து குறியீடுகளும் 1% கீழாக சரிவில் காணப்படுகின்றன.
நிஃப்டி குறியீடு
நிஃப்டி குறியீட்டில் உள்ள சிப்லா, பஜாஜ் ஆட்டோ, பார்தி ஏர்டெல், ஓ.என்.ஜி.சி, ஜே.எஸ்.டபள்யூ ஸ்டீல் உள்ளிட்ட குறியீடுகள் டாப் கெயினர்களாகவும், இதே ஹெச்.டி.எஃப்.சி, ஹெச்.டி.எஃப்.சி லைஃப், ஹெச்.டி.எஃப்.சி வங்கி, டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டீஸ், யுபிஎல் உள்ளிட்ட குறியீடுகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சென்செக்ஸ் குறியீடு
சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள பார்தி ஏர்டெல், மாருதி சுசுகி, ஐடிசி, ரிலையன்ஸ், சன் பார்மா உள்ளிட்ட குறியீடுகள் டாப் கெயினர்களாகவும், இதே ஹெச்.டி.எஃப்.சி, ஹெச்.டி.எஃப்.சி வங்கி, டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டீஸ், கோடக் மகேந்திரா, பஜாஜ் பின்செர்வ் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
தற்போதைய நிலவரம் என்ன?
இப்படி பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் தொடக்கத்தில் பெரியளவில் மாற்றமில்லாமல் தொடங்கியிருந்தாலும், தற்போது 9.59 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 318.33 புள்ளிகள் குறைந்து, 57,043 புள்ளிகளாகவும், நிஃப்டி 83.1 புள்ளிகள் குறைந்து, 17,069.90 புள்ளிகளாகவும் வர்த்தகமாகி வருகின்றது.
opening bell: indices trade lower amid weak global cues, focus in airtel, wipro
opening bell: indices trade lower amid weak global cues, focus in airtel, wipro/சென்செக்ஸ், நிஃப்டி முதல் நாளே வீழ்ச்சி.. முதலீட்டாளர்கள் பெரும் ஏமாற்றம்.. எவ்வளவு சரிந்திருக்கு?