சென்னையின் முக்கிய அடையாளம்: புதுப் பொலிவுக்கு தயாராகும் அண்ணா மேம்பாலம்

ஏறக்குறைய 50 ஆண்டுகள் வெற்றிகரமாக பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் சென்னையின் அண்ணா மேம்பாலம், சிறந்த கட்டுமான மேம்பாட்டிற்காக தயாராகிக் கொண்டிருக்கிறது. இந்த மேம்பாட்டுப் பணிக்காக ஒன்பது கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. 

முன்னாள் முதலமைச்சரான அண்ணாதுரையின் புகழ்பெற்ற வாக்கியங்களாக “கடமை, கண்ணியம், கட்டுப்பாடு” மற்றும் மாநில கலாச்சாரம், இறையாண்மை, சுயேட்சை மற்றும் மேம்பாடு ஆகிய தலைப்புகளைக் குறித்த வாக்கியங்களுடன் 32 பித்தளைப் பலகைகள் அமைக்கப்படவுள்ளது.

பல்லவக் காலத்தை இன்றைய நாட்களுக்கு கொண்டுவரும் வண்ணம் ஆறடி சிங்க சிலையை செதுக்கி, கதீட்ரல் ரோடு – அண்ணா மேம்பாலம் சந்திப்பிலும், நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை – அண்ணா மேம்பாலம் சந்திக்கும் இடத்திலும் நிறுவுவதாக திட்டமிடப்பட்டுள்ளது.

நம் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டின் அழகை உயர்த்திக்காட்டும் விதமாக, செதுக்கப்பட்ட கல் தூண்களை எட்டு நுழைவுகளிலும் மற்றும் மேம்பாலத்திலிருந்து வெளியேறும் இடங்களிலும் நிறுவப்படும்.

மாநிலத்தின் முதல் மேம்பாலமாக திகழும் சென்னையின் அண்ணா மேம்பாலத்தை, முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி 1971ஆம் ஆண்டு கட்டுமானப்பணிக்கான அடிக்கல்லை நாட்டினார்.

70 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட அண்ணா மேம்பாலம், ஜூலை 1, 1973ஆம் ஆண்டு சென்னைப் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக திறக்கப்பட்டது.

அண்ணா மேம்பாலத்தின் வாயிலில் அமைக்கப்பட்டிருக்கும் திறந்தவெளி விளையாட்டுப் பகுதியை (செம்மொழிப் பூங்காவிற்கு அருகில்) புதுப்பிக்கப்படவுள்ளது. மேலும், தமிழ் எழுத்துக்களுடன் நான்கு கல் சிற்பங்கள், பூங்கா பகுதிக்குள் இருக்கும் பெரியார் சிலை, ஆகியவை மேம்படுத்தப்படவுள்ளது. 

மாநில நெடுஞ்சாலைத்துறை மூலம் செயல்படுத்தப்படும் இத்திட்டத்திற்கு, தமிழக அரசு ஏற்கனவே, 9 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. மேம்பாலத்தின் 80 மீட்டர் தூரம் மட்டுமே தற்போது போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படுகிறது. மீதமுள்ள இடத்தில் சிற்பங்கள் மற்றும் நிலப்பரப்பு போன்ற முக்கிய கூறுகள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.