இலங்கை அரசாங்கத்தின் ஊற்பாட்டின் கீழ் ஐந்தாவது பிம்ஸ்ரெக் மாநாடு இன்று (28) கொழும்பில் ஆரம்பமாகிறது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் ஆரம்பமாகவுள்ள இந்த மகாநாடு எதிர்வரும் 30 ஆம் திகதிவரையில் மூன்று நாட்களுக்கு நடைபெறும்.
பிம்ஸ்ரெக் சிரேஷ்ட அதிகாரிகளின் மாநாடு மற்றும் அமைச்சர்கள் மட்டக் கூட்டத்தில் பங்ளாதேஷ், பூட்டான், இந்தியா, நேபாளம், தாய்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த சிரேஷ்ட அதிகாரிகளும் வெளிவிவகார அமைச்சர்களும் பங்கேற்கவுள்ளனர்.
இந்த மாநாட்டில் பிம்ஸ்ரெக் கொள்கைத் திட்டம் நிறைவேற்றப்படவுள்ளதுடன் உடன்படிக்கைகள் சிலவும் கைச்சாத்திடப்படும்.
இதேவேளை, இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்பிரமணியம் ஜெய்சங்கர் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று இலங்கைக்கு வருகைதரவுள்ளார்.
கொழும்பில் நடைபெறும் பிம்ஸ்ரக் மாநாட்டின் அமைச்சு மட்ட சந்திப்பிலும் அவர் பங்கேற்பார் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.