ஜியோ மூலம் விடிவு காலம்.. 28 நாள் பேக் தொல்லை இனி இல்லை..!

இந்திய டெலிகாம் சந்தையில் ஜியோ அறிமுகமான பிறகு பல மாற்றங்களை எதிர்கொண்ட நிலையில் கடந்த சில மாதங்களாக நிலையான வர்த்தகம் மற்றும் வளர்ச்சியைப் பதிவு செய்து வருகிறது.

ஏர்டெல், ஜியோ மற்றும் வோடபோன் ஐடியா டெலிகாம் சேவை கட்டணங்களை உயர்த்துவதில் குறியாய் இருக்கும் நிலையில் ஜியோ முக்கியமான மாற்றத்தை கொண்டு வந்துள்ளது.

ரிலையன்ஸ், பார்த் பெட்ரோலியம்-க்குப் போட்டியாக அதானி.. ஆட்டம் ஆரம்பம்..!

28 நாள் ரீசார்ஜ்

28 நாள் ரீசார்ஜ்

பொதுவாக ப்ரீபெய்டு டெலிகாம் சேவையில் அனைத்து பேக்குகளுமே 28 நாள் அடிப்படையில் தான் வாடிக்கையாளர்களுக்கு அளிக்கப்படுகிறது. மாதத்தில் 30 அல்லது 31 நாட்கள் இருக்கும் நிலையில் டெலிகாம் நிறுவனங்கள் 28 நாட்களுக்கு மட்டுமே சேவை திட்டத்தை அறிமுகம் காலம்காலமாகச் செய்து வருகின்றனர்.

இதை உடைக்கும் வகையில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ சிறப்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ

ரிலையன்ஸ் ஜியோ

இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ காலாண்டர் மாத அடிப்படையில் இயங்கும் ரூ.259 திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது ப்ரீபெய்ட் பயனர்கள் ஒவ்வொரு மாதமும் ஒரு ரீசார்ஜ் செய்ய வேண்டிய தேதியை எளிதாக நினைவில் வைத்துக் கொள்ள முடியும். முதல் முறையாக ரிலையன்ஸ் ஜியோ தான் ‘காலண்டர் மாத’ அடிப்படையில் ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

 ஒரு மாதம் ரீசார்ஜ்
 

ஒரு மாதம் ரீசார்ஜ்

இந்த 259 ரூபாய் திட்டத்தின் படி 30 அல்லது 31ஆம் தேதி போன்ற எவ்விதமான கட்டுப்பாடும் இல்லாமல் ஒரு மாதம் என்ற அடிப்படையில் இயங்கும அதாவது மார்ச் 29ஆம் தேதி ரீசார்ஜ் செய்தால் ஏப்ரல் 29ஆம் தேதி மீண்டும் ரீசார்ஜ் செய்ய வேண்டும். இதன் மூலம் எப்போது ரீசார்ஜ் செய்ய வேண்டும் என்ற பிரச்சனை இல்லை, அதேபோல் சம்பளம் வரும் நாளில் திட்டமிட்டு ரீசார்ஜ் செய்துகொள்ள முடியும்.

259 ரூபாய் திட்டம்

259 ரூபாய் திட்டம்

ஜியோவின் இப்புதிய 259 ரூபாய் திட்டத்தில் தினமும் 1.5 ஜிபி இண்டர்நெட் டேட்டா மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால் சேவை அளிக்கப்படுகிறது. மேலும் இத்திட்டத்தின் மூலம் வருடத்திற்கு 12 ரீசார்ஜ் மட்டுமே ஆனால் 28 நாள் கொண்ட திட்டத்தில் கட்டாயம் 13வது முறை ரீசார்ஜ் செய்ய வேண்டி நிலை உருவாகும்.

ஜியோ, ஏர்டெல்

ஜியோ, ஏர்டெல்

ரிலையன்ஸ் ஜியோ-வின் இத்தகைய சேவை வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் நிலையில், விரைவில் ஏர்டெல் நிறுவனமும் இதேபோன்ற திட்டத்தை அறிவிக்கும். ஆனால் இதுநாள் வரையில் 28 நாள் ரீசார்ஜ் திட்டம் மட்டுமே அளித்து மக்களிடம் டெலிகாம் நிறுவனங்கள் அதிகப்படியான லாபத்தைப் பார்த்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Reliance Jio launches new Rs.259 calendar based month validity’ prepaid plan; Airtel on Shock

Reliance Jio launches new Rs.259 calendar based month validity’ prepaid plan; Airtel on Shock ஜியோ மூலம் விடிவு காலம்.. 28 நாள் பேக் தொல்லை இனி இல்லை..!

Story first published: Monday, March 28, 2022, 19:26 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.