உக்ரைன் அதிபர் விலாடிமிர் ஜெலன்ஸ்கியைக் கொல்லும் நோக்குடன் ஊடுறுவிய 25 பேர் கொண்ட ராணுவக் குழுவை கைது செய்துள்ளதாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.
ரஷ்யாவின் சிறப்பு சேவை படைப் பிரிவைச் சேர்ந்தவர்கள் இவர்கள் என்றும், இவர்களுக்கு ஜெலன்ஸ்கியைக் கொல்லும் அசைன்மென்ட் கொடுக்கப்பட்டிருந்ததாகவும், அதை உக்ரைன் படையினர் முறியடித்துக் கைது செய்து விட்டதாகவும் உக்ரைன் அரசுத் தரப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பான செய்தியை தி கீவ் போஸ்ட் நாளிதழ் வெளியிட்டுள்ளது.
இந்த 25 பேர் கொண்ட குழுவை ஸ்லோவேகியா – ஹங்கேரி எல்லையில் வைத்து உக்ரைன் படையினர் பிடித்ததாகவும் உக்ரைன் தரப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து உக்ரைன் அரசுத் தரப்பினர் கூறுகையில், விலாடிமிர் ஜெலன்ஸ்கியைக் கொல்லும் இன்னொரு முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. இதுவரை கூலிப்படையினர் அனுப்பப்பட்டனர். தற்போது 25 பேர் கொண்ட ரஷ்ய சிறப்பு ராணுவத்தினர் ரஷ்ய அரசால் அனுப்பப்பட்டிருந்தனர். அவர்கள் பிடிபட்டுள்ளனர். உக்ரைன் அதிபரைக் கொல்வதுதான் இவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்த உத்தரவாகும் என்று தெரிவித்துள்ளனர்.
“சபாஷ்.. சரியான பளார்”.. வில் ஸ்மித் விட்ட அடிக்கு.. ராமதாஸ் சூப்பர் சப்போர்ட்!
ஜெலன்ஸ்கியைக் கொல்ல முயற்சிகள் நடப்பது இது முதல் முறையல்ல. தொடர்ந்து ரஷ்யா முயன்று வருவதாக உக்ரைன் குற்றம் சாட்டிக் கொண்டிருக்கிறது. இதுதொடர்பான பல முயற்சிகளை தங்களது ராணுவம் முறியடித்துள்ளதாக உக்ரைன் தரப்பு கூறி வருகிறது. ஜெலன்ஸ்கியைக் கொல்லும் நோக்கில் ஏற்கனவே ரஷ்யாவிலிருந்து பலர் உக்ரைனுக்குள் ஊடுறுவியுள்ளதாகவும், மக்களோடு மக்களாக அவர்கள் கலந்திருப்பதாகவும் உக்ரைன் அரசு கூறியுள்ளது. ஜெலன்ஸ்கியும் கூட இதை பலமுறை சொல்லியுள்ளார். இந்த நிலையில் 25 பேர் கொண்ட ரஷ்ய ராணுவக் குழுவினரை கைது செய்துள்ளதாக உக்ரைன் கூறியுள்ளது.
இருப்பினும் வழக்கம் போல இதுதொடர்பான ரஷ்ய தரப்பின் கருத்தை அறிய முடியவில்லை. மேற்கத்திய ஊடகங்கள், ரஷ்யத் தரப்பு தகவல்களை, அரசுத் தகவல்களை வெளியிடுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. உக்ரைன் அரசுத் தரப்பிலான செய்திகளை மட்டுமே மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றன. ரஷ்யாவை முழுமையாக அவை புறக்கணித்து வருகின்றன. இதனால் ரஷ்யத் தரப்பு தகவல் எதுவும் தெரியவில்லை.
அடுத்த செய்திபிரதமருக்கு கொரோனா பாசிட்டிவ் – அதிர்ச்சியில் அமைச்சர்கள்!