சென்னை : 3 நாள் பயணமாக டெல்லி செல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 31ம் தேதி பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார்.
தலைநகர் டெல்லியில் கட்டப்பட்டுள்ள திமுக அலுவலகமான அண்ணா அறிவாலயம் ஏப்ரல் 2ந்தேதி திறக்கப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள எதிர்க்கட்சி தலைவர்கள், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, ராகுல்காந்தி மற்றும் பாஜக தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, நிர்மலா உள்பட பலருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக 3 நாள் பயணமாக டெல்லி வரும் 30ம் தேதி இரவு விமானத்தில் முதல்வர் ஸ்டாலின் டெல்லி செல்கிறார். அங்கு 31ம் தேதி மதியம் பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார். அப்போது நீட் தேர்வு விலக்கு உள்பட தமிழக அரசின் கோரிக்கைகள் அடங்கிய மனுவை 31ம் தேதி மதியம் 1 மணிக்கு பிரதமரிடம் தருகிறார். மேலும் உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்பட பலரை சந்திக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே 2 நாள் டெல்லி பயணம் என திட்டமிட்டிருந்த நிலையில், தற்போது 3 நாள் பயணமாக மாற்றப்பட்டுள்ளது.
இரண்டு நாள் பயணமாக ஏப்ரல் 1ந்தேதி டெல்லி செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!