எல்லாராலும் ருசியாக சமைத்திட இயலாது. அதற்கேற்ற பக்குவமும், அனுபவமும் தெரிந்தவரால் மட்டுமே முடியும்.இருப்பினும், சில டிப்ஸ்களை ஃபாலோ செய்தால், உங்கள் சமையிலும் டாப் நாச் சொல்லும் அளவுக்கு ருசியாக மாறுவது மட்டுமின்றி பாராட்டுகளை பெறும்.அதற்கான, 5 டிப்ஸ்களை இச்செய்தி தொகுப்பில் காணலாம்.
- வெயில் காலத்தில் தயிர் புளிக்காமல் இருக்க, அதில் ஒரு துண்டு தேய்காய் போட்டால் போதும்.
- முள்ளங்கியை சமைக்கும் போது, அதை லேசாக எண்ணெயில் வறுத்து சமைத்தால் போதும், சளி பிடிப்பதை தடுத்திட முடியும்.
- வாழைப்பழத்தை வீட்டில் வாங்கிவைத்திருந்தால், அதனை தனியாக தான் வைத்திட வேண்டும். ஏனெனில், வாழைப்பழம் அருகில் மற்ற பழங்கள் இருந்தால், அவை சீக்கிரம் பழுத்திட வாய்ப்பியிருக்கிறது.
- வாழைக்காயை சமைக்கும்போது, அதில் கொஞ்சம் சீரகம், பூண்டு சேர்த்து சமைத்தால் போதும், வாயு தொல்லை சுத்தமாக இருக்காது
- சில நேரங்களில் சேமியா பாயசம் செய்யும்போது, குழைந்து போய் விடும். அச்சமயத்தில், அதில் ல், 1/4 ஸ்பூன் எலுமிச்சை பழச்சாறு ஊற்றினால் போது, பாயசம் சூப்பராக மாறிவிடும். அதில், ஒட்டியிருக்கும் சேமியா தனித்தனியாக பிரிந்து சென்றுவிடும்.