தளபதியின் 'பீஸ்ட் ' படத்துடன் மோதலா..?: 'கே.ஜி.எஃப்' நாயகனின் மிரட்டலான பதில்..!

இந்திய அளவில் மிகப்பெரிய ஹிட்டித்த கேஜிஎப் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வெளியீட்டிற்கு காத்து கொண்டிருக்கிறது. ஜூலை 16-ம் தேதி வெளியாக இருந்த ‘கே.ஜி.எஃப் 2’ படம் கொரோனா இரண்டாம் அலையால் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி உலகம் முழுவதும் இந்தப்படம் வெளியாகவுள்ளது.

பிரஷாந்த் நீல் இயக்கத்தில் கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான படம் ’கேஜிஎஃப்’. இந்திய அளவில் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வெளியீட்டிற்கு காத்து கொண்டிருக்கிறது. நடிகர்
யாஷ்
உடன் ஸ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய் தத், பிரகாஷ் ராஜ், ரவீனா டாண்டன் உள்ளிட்ட நடசத்திரங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

அண்மையில் ‘
கேஜிஎஃப் 2
’ படத்தின் டீசர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. அப்போது கடந்த ஜூலை மாதம் 16-ஆம் தேதி ‘கேஜிஎஃப் 2’ படம் உலகம் முழுக்க வெளியாகும் அறிவித்திருந்தனர் படக்குழு. ஆனால், கொரோனா இரண்டாவது அலை தாக்கத்தால் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திரா, மகாராஷ்ட்ரா உள்ளிட்ட பல மாநிலங்களில் தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளதால்,‘கேஜிஎஃப் 2’ படத்தின் ரிலீஸ் தேதியை ஒத்தி வைத்தனர் படக்குழுவினர்.

தனுஷ் குடும்பத்தினருடன் நெருக்கம் காட்டும் ஐஸ்வர்யா: குழம்பித் தவிக்கும் ரசிகர்கள்..!

இந்நிலையில் விஜய்யின் ‘
பீஸ்ட்
‘ படம் ஏப்ரல் 13 ஆம் தேதி வெளியாகவுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப்படத்தின் ரிலீசுக்காக
விஜய்
ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். ‘பீஸ்ட்’ படத்திற்கும் ‘கேஜிஎஃப் 2’ கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ‘கேஜிஎஃப் 2’ டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்றைய தினம் நடைபெற்றது.

இதில் பேசிய யாஷ், இது தேர்தல் கிடையாது. சினிமா. கொண்டாட வேண்டும். விஜய் சார் மேல் எனக்கு பெரிய மரியாதை உள்ளது. கண்டிப்பாக நான் ‘பீஸ்ட்’ படம் பார்ப்பேன். விஜய் ரசிகர்களும் ‘கேஜிஎஃப் 2’ பார்ப்பாங்கன்னு தெரியும் என தெரிவித்துள்ளார். நடிகர் யாஷின் இந்தப்பேச்சு இணையத்தில் வைரலாகி வருகிறது. ‘கேஜிஎஃப் 2’ தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

படம் முழுக்க Goosebumps; பின்னி பெடலெடுத்துட்டாரு ராஜமௌலி!

அடுத்த செய்திவெறித்தனம், வெறித்தனம்: மிரள வைக்கும் கே.ஜி.எஃப்.2 ட்ரெய்லர்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.