சுற்றுச்சூழல் மாசை கட்டுப்படுத்தும் நோக்கில் தாய்லாந்து தலைநகர் பாங்காக்கின் பிரதான கால்வாய் ஒன்றில் முழுக்க முழுக்க பேட்டரியில் இயங்கும் பயணிகள் மின்சார படகுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
பாங் காபி நகரையும் மின்புரி நகரையும் இணைக்கும் 11 கிலோ மீட்டர் கால்வாயில் இந்த படகுகள் விடப்பட்டுள்ளன. இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை இந்த மின்சார படகுகளில் இலவசமாக பயணிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
படகுகளின் கூரையில் சூரிய மின் சக்தி தகடுகள் பொருத்தப்பட்டு அதில் இருந்து கிடைக்கும் மின்சாரமும் பேட்டரிகளை சார்ஜ் செய்ய பயன்படுத்தப்படுகிறது.