பீட்ரூட் எல்லோரும் விரும்பி சாப்பிடும் காய்கறிகளில் ஒன்று.
பீட்ரூட்டில் இரும்புச்சத்து, ஃபோலேட், வைட்டமின் 12 போன்ற இரத்தணுக்களின் உற்பத்திற்கு வேண்டிய சத்துக்கள் வளமாக உள்ளது.
அதனை தினமும் ஜூஸ் வடிவில் எடுத்து கொள்வது நன்மையே தரும். எனவே இதனை தினமும் குடித்து வந்தால் நன்மையே தரும்.
அந்தவகையில் இதனை குடிப்பதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை பார்ப்போம்.
- பீட்ரூட் ஜூஸைக் குடித்து வந்தால், கல்லீரலில் உள்ள பாதிக்கப்பட்ட செல்கள் புதுப்பிக்கப்படும். கல்லீரல் பாதிப்படைவதில் இருந்து நல்ல பாதுகாப்பு வழங்கும்.
- உடலில் இரத்தணுக்களின் அளவு சீராக இருக்க நினைத்தால், பீட்ரூட் ஜூஸை அடிக்கடி குடித்து வாருங்கள். முக்கியமாக இரத்த சோகை உள்ளவர்கள், இந்த ஜூஸை தினமும் குடித்து வந்தால், உடலில் இரத்தத்தின் அளவு வேகமாக அதிகரிக்கும்.
- கிருமிகளின் தாக்கத்தினால் உடலினுள் அழற்சி ஏற்பட்டு வீங்க ஆரம்பிக்கும். ஆனால் பீட்ரூட் ஜூஸை ஒரு டம்ளர் தினமும் குடித்து வந்தால், அதில் உள்ள நோயெதிர்ப்பு அழற்சி தன்மை அதனைத் தடுக்கும்.
- பீட்ரூட் ஜூஸ் குடிப்பதால் புற்றுநோய செல்களின் வளர்ச்சியைத் தடுத்து, புற்றுநோயைத் தடுக்கும் .
- உங்களுக்கு உடலை சுத்தம் செய்ய வேண்டுமானால், பீட்ரூட் ஜூஸை தினமும் ஒரு டம்ளர் குடித்து வாருங்கள். இதனால் உடல் சுத்தமாகும்.
- பீட்ரூட் ஜூஸ் உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, உடலின் அனைத்து பாகங்களுக்கும் ஆக்ஸிஜன் போதிய அளவில் கிடைக்க வழிவகைச் செய்து, உடலின் ஸ்டாமினாவை அதிகரிக்கும்.
- உங்களுக்கு இரத்த அழுத்தம் அதிகமாக இருந்தால், தினமும் ஒரு டம்ளர் பீட்ருட் ஜூஸைக் குடித்து வாருங்கள்.
- பீட்ரூட் ஜூஸ் மூளையில் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதாகவும், அதனால் முதுமை மறதி நோய் தடுக்கப்படும்.