புதுடில்லி: பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகி, ஒலிம்பிக்கில் நீரஜ் சோப்ரா, பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற பிரமோத் பகத் ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருதுகளை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.
டில்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நடப்பாண்டிற்கான பத்ம விருதுகள் 2வது கட்டமாக இன்று (மார்ச் 28) வழங்கப்பட்டது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மீதமுள்ள 64 பேருக்கு பத்ம விருதுகளை வழங்கினார். பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகி, டாக்டர் வீராசாமி சேஷய்யா, சமூக செயற்பாட்டாளர் தாமோதரன், தவில் இசைக்கலைஞர் முருகையன் ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருதினை வழங்கினார்.
ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா, பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற பிரமோத் பகத், சுமித் ஆகியோருக்கும் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. மறைந்த உ.பி., முன்னாள் முதல்வர் கல்யாண் சிங், பிரபா அத்ரே உள்ளிட்டோருக்கு பத்ம விபூஷன் விருதும், பாரத் பயோடெக் நிர்வாக இயக்குநர் கிருஷ்ணா எல்லா, இணை இயக்குநர் சுசித்ரா எல்லாவிற்கு பத்மபூஷன் விருதும் வழங்கப்பட்டது.
Advertisement