ஹைதராபாத் : தெலுங்கானாவில், 1,280 கோடி ரூபாயில் புனரமைக்கப்பட்ட லட்சுமி நரசிம்ம சுவாமி கோவிலின் கும்பாபிஷேகம் நேற்று விமரிசையாக நடந்தது. இதில், முதல்வர் சந்திரசேகர ராவ் மற்றும் அனைத்து அமைச்சர்களும் பங்கேற்றனர்.
தெலுங்கானாவில், முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையில் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள யாதாத்ரி புவனகிரி மாவட்டத்தில் அமைந்துள்ளது, லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில். இக்கோவில் வளாகம், 11 ஏக்கரில் இருந்து, 17 ஏக்கராக விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
மேலும், பல புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. இக்கோவில், 2.50 லட்சம் டன் கறுப்பு கிரானைட் கற்களால் அமைக்கப்பட்டுள்ளது. மொத்தம், 1,280 கோடி ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்ட இக்கோவிலின் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதில், முதல்வர் சந்திரசேகர ராவ் மற்றும் அவரது அமைச்சர்கள் அனைவரும் பங்கேற்றனர்.
ஹைதராபாத் : தெலுங்கானாவில், 1,280 கோடி ரூபாயில் புனரமைக்கப்பட்ட லட்சுமி நரசிம்ம சுவாமி கோவிலின் கும்பாபிஷேகம் நேற்று விமரிசையாக நடந்தது. இதில், முதல்வர் சந்திரசேகர ராவ் மற்றும் அனைத்து
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.