நாட்டில் முதல்முறையாக குஜராத்தில் இரும்புக் கழிவுகளைக் கொண்டு சாலை அமைக்கப்பட்டுள்ளது.
அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் மத்திய சாலை ஆராய்ச்சி நிறுவனம் உள்ளிட்டவை ஒன்றிணைந்து, ஹசிரா துறைமுக நகரில் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்த சாலையை அமைத்துள்ளனர். மற்ற சாலைகளைக் காட்டிலும் 30 சதவிகிதம் தடிமன் குறைக்கப்பட்டுள்ளதாவும், மழை மற்றும் பேரிடர் காலங்களில் சாலை சேதமடைவதைத் தடுக்கும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன்மூலம் செலவு குறைவதோடு, இரும்புக் கழிவுகளை இனி பயனுள்ளதாக உபயோகிக்க முடியும் எனக் கூறுகின்றனர்.
இதையும் படிக்க: தொழிற்சங்கத்தினரின் வேலைநிறுத்த போராட்டம்: தலைநகர் டெல்லியின் நிலவரம் என்ன?Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM