‘நீட்’ விவகாரத்தில் நல்ல முடிவு எட்டப்படும்- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி

மதுரை:

தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் நேரடி நியமன வட்டாரக்கல்வி அலுவலர்களுக்கு நிர்வாகத் திறன் மேம்பாட்டு பயிற்சி தொடக்க விழா மதுரை நாகமலை புதுக்கோட்டையில் உள்ள பில்லர் மையத்தில் இன்று நடைபெற்றது.

இதில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த பயிற்சியில் தென்மாவட்ட வட்டார கல்வி அலுவலர்கள் 95-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

அவர்களுக்கு முதற்கட்டமாக நிர்வாகத்திறன் மேம்பாட்டு குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அமைச்சர் அன்பில் மகேஷ் பெய்யாமொழி நிருபர்களிடம் கூறியதாவது:-

வட்டார கல்வி அலுவலர்களுக்கு பணி நியமன ஆணையை தமிழக பள்ளிக்கல்வித்துறை பெற்றுத்தந்துள்ளது. நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக ஆளுநரை சந்தித்து பேசினோம். நீட் தேர்வு விவகாரம் குறித்து டெல்லிக்கு அனுப்புவதாக கூறி உள்ளார். விரைவில் தமிழக முதல்வர், குடியரசு தலைவரை சந்தித்து பேசுவார். அதன் மூலம் நீட் தேர்வுக்கு நல்லதொரு முடிவு எட்டப்படும் என நம்புகிறோம்.

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொடர்பாக தற்போது பள்ளி மாணவர்களுக்கு இல்லம் தேடி கல்வி 1.80 லட்சம் மையங்கள் உள்ளது. பள்ளி மாணவர்களுக்கு குட் டச், பேட் டச் குறித்து இதன் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

18 வயது உள்பட்ட பள்ளி மாணவ-மாணவிகள் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்வதை தடுக்க சம்பந்தப்பட்ட பள்ளி கல்வித்துறை அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்கள் குறித்த நேரத்தில் பேருந்தில் பயணம் செய்தால் அவர்கள் பயனடைவார்கள். ஆனால் பள்ளி மாணவர்கள் ஸ்டைலாக செல்ல வேண்டும் என்பதற்காக பேருந்தில் படியில் தொங்கி கொண்டு பயணம் செய்கின்றனர்.

ஒட்டுமொத்த தமிழக மக்களும் விரும்பும் தலைவரான தமிழக முதல்வரை, விமர்சனம் செய்து அண்ணாமலை விளம்பரம் தேடுகிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.