சண்டிகர்:
பஞ்சாப் மாநிலத்தில் முதல்-மந்திரி பகவந்த் மான் தலைமையில் ஆம்ஆத்மி ஆட்சி நடந்து வருகிறது. இந்த நிலையில் அங்கு வீடு தேடி ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இது தொடர்பாக முதல்-மந்திரி பகவந்த் மான் கூறியதாவது:-
பஞ்சாப் மாநிலத்தில் குடும்ப அட்டை தாரர்களுக்கு ரேஷன் பொருட்களை வீடுகளுக்கே சென்று வழங்குவதற்கான திட்டம் அறிமுகம் செய்யப்படும். ரேஷன் பொருட்களை வழங்குவதற்கான நேரத்தை குடும்ப அட்டை தாரர்களிடம் கேட்டு வினியோகிக்கப்படும். ரேஷன் கடைக்கு சென்றாலும் பொருட்களை பெற்றுக்கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படியுங்கள்… மேற்கு வங்க சட்டசபையில் திரிணாமுல்-பாஜக மோதல்: ஐந்து எம்.எல்.ஏக்கள் சஸ்பெண்ட்