பணத்தை எடுத்து வரவில்லை, தமிழக மக்களின் மனதை எடுத்துவந்துள்ளேன்: அபுதாபியில் ஸ்டாலின் பேச்சு| Dinamalar

அபுதாபி: நான் துபாய்க்கு பணத்தை கொண்டு வரவில்லை தமிழக மக்களின் மனதை எடுத்து வந்துள்ளேன் என முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

ஐக்கிய அமீரகம் சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின் அங்குள்ள தமிழ் சங்கத்தினர் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பேசியது, நான் துபாய்க்கு பணத்தை கொண்டு வந்துள்ளதாக சிலர் எனது பயணம் குறித்து அவதூறு பரப்புகின்றனர். நான் பணத்தை கொண்டு வரவில்லை. தமிழ் மக்களின் மனத்தை கொண்டுவந்துள்ளேன். எனது வெளிநாட்டு பயணத்தை திசை திருப்ப வேண்டும் என்பதற்காக சிலர் தவறான பிரசாரத்தில் ஈடுபடுகின்றனர்.

தமிழ்நாட்டை நோக்கி தமிழர்களின் மனங்களை ஈர்க்கும் விதமாகத்தான் எனது பயணம் அமைந்துள்ளது. எனது ஐக்கிய அமீரக பயணத்தின் வெற்றியை சிலரால் தாங்கி கொள்ள முடியவில்லை.

தமிழகத்த தெற்காசியாவிலேயே சிறந்த மாநிலமாக மாற்ற வேண்டும் என்பதற்காகத்தான் உழைத்துக்கொண்டிருக்கிறேன். பேச்சை குறைத்து நம் திறமையை செயலில் காட்ட வேண்டும் என்ற நோக்கிலும், ஒரு புறம் கடந்த கால பெருமிதம், ஒரு புறம் எதிர்கால வளர்ச்சி ஆகியவற்றை கருத்தில் கொணடும் செயல்படுகிறேன். 4 நாட்களில் துபாய் பயணத்தை முடித்து விட்டோமே, இன்று 4 நாட்கள் இருக்க கூடாதா என்ற ஏக்கம் உள்ளது. இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.