இஸ்லாமாபாத்
இன்று பாகிஸ்தானில் எதிர்க்கட்சிகள் இம்ரான்கான் மீது கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.
பாகிஸ்தானில் தற்போதைய பிரதமர் இம்ரான்கானுக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதையொட்டி அவர் மீது எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் தாக்கல் செய்துள்ளது. இந்த தீர்மானத்தின் மீது இன்று வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. தற்போது இம்ரான்கானுக்கு அவரது கட்சியிலேயே எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
இம்ரான்கான் கட்சியைச் சேர்ந்த 24 நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சிகளுடன் இணைந்து நம்பிக்கையிலா தீர்மானத்துக்கு ஆதரவு கொடுக்க முடிவு செய்துள்ளனர். இம்ரான்கானுக்கு இது மேலும் அழுத்தம் அளித்துள்ளது. இன்றைய நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பில் அநேகமாக இம்ரான்கான் அரசு கவிழ வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.
நேற்று இம்ரான்கானின் பிடி கட்சி தலைநகர் இஸ்லாமாபாத்தில் ஒரு பொதுக்கூட்ட, நடத்தியது. அதில் இம்ரான்கான் பங்கேற்றுப் பேசிய போது தமது ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற பணிகளை குறிப்பிட்டு தமது ஆட்சி போல் யாரும் இதுவரை சிறப்பாக ஆட்சி செய்ததில்லை என கூறி உள்ளார். மேலும் பாகிஸ்தானை யாருக்கும் பணிய விடமாட்டோம் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த வீராவேச உரை பாகிஸ்தான் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்துமா என்பது இன்று தெரிந்து விடும்.