இஸ்லாமாபாத்
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது 31 ஆம் தேதி விவாதத்துக்குப் பிறகு வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.
பாகிஸ்தானில் ர்கேபோர்ஹு கடுமையான நிதி நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வு நிலவி வருகிறது. இதற்கு பிரதமர் இம்ரான் கானின் செயல்பாடுகளே காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. எனவே எதிர்க்கட்சிகள் இம்ரான் கானுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்துள்ளது. இந்த தீர்மானம் தொடர்பாக, கூட்டத்தொடரைக் கூட்டுமாறு சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்து, எதிர்க்கட்சிகள் தேசிய சபையில் மனு அளித்தன
இதனால் பாகிஸ்தான் அரசியலில் நிச்சயமற்ற நிலை உருவானது. மேலும் இம்ரான்கானின் சொந்த கட்சி உறுப்பினர்கள் சிலரே நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு ஆதரவளிக்கக்கூடும் என்பதால் ஆட்சி நெருக்கடி ஏற்பட்டதால் இம்ரான் கான் பதவி விலகுவார் என்றும் பேசப்பட்டது. இம்ரான் கான் பதவி விலகாமல் தனது பலத்தை காட்டும் வகையில் நேற்று பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்தி, எதிர்க்கட்சிகளைக் கடுமையாக விமர்சனம் செய்தார்.
இந்நிலையில், பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக இன்று நம்பிக்கையில்லா தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எதிர்க்கட்சி தலைவர் ஷபாஸ் ஷெரிப் தீர்மானத்தைத் தாக்கல் செய்தார். தீர்மானத்திற்கு ஆதரவாக 161 உறுப்பினர்கள் உள்ளனர். தீர்மானம் மீது 31ம் தேதி (வியாழக்கிழமை) விவாதம் நடத்தப்படும். விவாதத்திற்குப் பிறகு வாக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது..
தீர்மானம் நிறைவேற 342 உறுப்பினர்கள் கொண்ட தேசிய சபையில் 172 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. நிச்சயம் இந்த ஆதரவை நிச்சயம் பெறுவோம் என்ற நம்பிக்கையில் எதிர்க்கட்சிகள் உள்ளன. அதே வேளையில் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சிக்கு 155 உறுப்பினர்கள் உள்ளனர். ஆகவே கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் 172 உறுப்பினர்கள் தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தால் மட்டுமே இம்ரான் கான் பதவியில் இருந்து நீக்க முடியும்.
இன்று வாக்கெடுப்பு நடைபெறும் எனச் செய்திகள் வந்த நிலையில் வாக்கெடுப்பு 31 ஆம் தேதி விவாதத்துக்குப் பிறகு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.