இஸ்லாமாபாத்: இம்ரான் கான் அரசை தொடர்ந்து பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாண முதல்வர் உஸ்மான் பஸ்தாரை நீக்க கோரும் தீர்மானம் கொண்டு வரப்பட்டதாக தகவல் வெளியாகியள்ளது.
அண்டை நாடான பாகிஸ்தான், நிதி நெருக்கடி, விலை வாசி உயர்வு போன்றவற்றால், தள்ளாடுகிறது. இதற்கு பிரதமர் இம்ரான்கானின் செயல்பாடுகளே காரணம் என, எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.இதையடுத்து இம்ரான் கான் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கட்சித் தலைவர் ஷப்பாஸ் ஷெ ரீப் பார்லிமென்டில் இன்று தாக்கல் செய்தார்.
இந்நிலையில் பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தின் இம்ரானின் கட்சி முதல்வர் உஸ்மான் பஸ்தார் மீது ஊழல் புகாரை அடுத்து, அவரை நீக்க கோரும் தீர்மானம் பஞ்சாப் மாகாண சட்டசபையில் எதிர்கட்சிகள் கொண்டு வந்தனர். இதற்கு 126 உறுப்பினர்கள் ஆதரவு அளித்ததாகவும், இதையடுத்து முதல்வர் உஸ்மான் பஸ்தார் தனது பதவியை ராஜினாமா செய்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இஸ்லாமாபாத்: இம்ரான் கான் அரசை தொடர்ந்து பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாண முதல்வர் உஸ்மான் பஸ்தாரை நீக்க கோரும் தீர்மானம் கொண்டு வரப்பட்டதாக தகவல் வெளியாகியள்ளது.அண்டை நாடான பாகிஸ்தான்,
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.