சென்னை மாநகர காவல்துறை ஆட்டோக்களில் அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளது.
போக்குவரத்து துறையினர் இன்று வேலை நிறுத்தம் செய்துள்ளனர். இந்த வேலைநிறுத்தம் நாளையும் தொடர்கிறது. இதன் காரணமாக மக்களின் இக்கட்டான சூழலை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள நினைத்து சென்னை ஆட்டோ ஓட்டுனர்கள் பொதுமக்களிடம் அதிக அளவில் கட்டணங்களை வசூலிப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது.
இத்தகைய நிலையில் சென்னை மாநகர காவல் துறையினர் இதுகுறித்த பொது வேலை நிறுத்தத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு ஷேர் ஆட்டோக்கள் மற்றும் ஆட்டோக்களில் பயணம் செய்யும் பொதுமக்களிடம் அதிக கட்டணங்கள் வசூலிக்கப்படும் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
என்று சென்னையில் அதிக கட்டணம் வசூலித்த ஆட்டோ ஓட்டுநர்கள் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.” என்று தெரிவித்துள்ளது