ஷிவமொகா : ”வீரசைவம் — லிங்காயத் சமுதாயங்களை பிரித்தாகிவிட்டது. இப்போது மடாதிபதிகளுக்கிடையே விரிசலை ஏற்படுத்த எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா முயற்சிக்கிறார்,” என கிராம அபிவிருத்தி, பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சர் ஈஸ்வரப்பா சாடினார்.ஷிவமொகாவில், அவர் நேற்று கூறியதாவது:சகலத்தையும் தியாகம் செய்தவர்கள் மடாதிபதிகள். ஆனால் சிறிய சுவாமிஜி, பெரிய சுவாமிஜி என கூறி, இவர்களுக்குள் பிரிவினையை ஏற்படுத்த, சித்தராமையா முயற்சிக்கிறார்.
காங்கிரசின் எந்த தலைவரும், சித்தராமையாவுக்கு ஆதரவாக பேசவில்லை. இதை அவர் புரிந்து கொள்ள வேண்டும். காங்கிரஸ் ஆட்சியை இழந்தும், சாமுண்டீஸ்வரியில் தோற்றும், இவருக்கு புத்தி வரவில்லை.அடுத்த தேர்தலில் போட்டியிட இவரிடம் தொகுதிகளே இல்லை. ஜமிர் அகமது கானின், சாம்ராஜ்பேட்டையை தவிர, வேறெந்த தொகுதியும் இல்லை.அத்தொகுதியில் உள்ளவர்களை மகிழ்ச்சிப்படுத்தும் நோக்கில், ஹிந்துக்களுக்கு எதிராக சித்தராமையா பேசுகிறார். இவருக்கு மக்களே பாடம் புகட்டுவர்.இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement