94வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. கிங் ரிச்சர்ட் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக வில் ஸ்மித்துக்கு சிறந்த நடிகருக்கான விருது கிடைத்தது.
இந்நிலையில் தன் மனைவியை கிண்டல் செய்த நிகழ்ச்சி தொகுப்பாளர் கிறிஸ் ராக்கை அறைந்தார் வில் ஸ்மித். அவரின் செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து விருது பெற்ற பிறகு
வில் ஸ்மித்
கூறியதாவது,
ஆஸ்கர் அகாடமியிடம் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன். ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட அனைவரிடமும் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன்.
வாழ்க்கையை கலை பிரதிபலிக்கிறது. ரிச்சர்ட் வில்லியம்ஸ் பற்றி அவர்கள் சொன்னது போன்று நான் பைத்தியக்கார தந்தையாக தெரிகிறேன். ஆனால் அன்பு அனைத்து விதமான பைத்தியக்காரத்தனத்தை செய்ய வைக்கும்.
இந்த கௌரவத்திற்கு நன்றி. இந்த தருணத்திற்கு நன்றி. இந்த அகாடமி என்னை மீண்டும் அழைக்கும் என்று நம்புகிறேன் என்றார்.
காமெடியனை அறைந்த நடிகர்: வெளுத்து வாங்கும் நெட்டிசன்ஸ்
கிறிஸ் ராக்
கூறியதை கேட்டு முதலில் சிரித்த வில் ஸ்மித், தன் மனைவி கோபப்பட்டதும் மேடைக்கு சென்று அறைந்ததை ஏற்க முடியாது என்று கூறி சமூக வலைதளவாசிகள் விளாசிக் கொண்டிருக்கிறார்கள்.
அடுத்த செய்தி’அவருக்காக’ விஜய்யை இருட்டடிப்பு செய்கிறதா சன் பிக்சர்ஸ்?