டெல்லியில் வரும் 31ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திக்க உள்ளார்.
3 நாள் பயணமாக வரும் 30ஆம் தேதி டெல்லி செல்லும் முதலமைச்சர், ஜிஎஸ்டி நிலுவைத் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிரதமரிடம் மனு அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதனைத் தொடர்ந்து மத்திய அமைச்சர்கள், காங்கிரஸ் கட்சித் தலைவர்களையும் சந்தித்து முதலமைச்சர் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.
டெல்லியில் கட்டப்பட்டுள்ள அண்ணா கலைஞர் அறிவாலயத்தை வரும் 2ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.