இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அரசு முறை பயணமாக இலங்கை சென்றுள்ளார்.
கொழும்பில் இன்று தொடங்கவிருக்கும் பிம்ஸ்டெக் அமைப்பு மாநாட்டில் கலந்துகொண்டு அவர் உரையாற்ற உள்ளார். இதனை அமைச்சர் ஜெய்சங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில், தமிழ், ஆங்கிலம், சிங்கள மொழிகளில் பதிவிட்டுள்ளார். அவரை, தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் சந்தித்து பேச உள்ளனர். இதனிடையே, இந்திய அரசின் நிதியுதவியுடன் கட்டிமுடிக்கப்பட்ட யாழ்ப்பாணம் பண்பாட்டு மையம் திறப்பு விழா இன்று நடைபெறவுள்ளது. இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ச, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் எளிமையான முறையில் காணொலி வாயிலாக திறந்துவைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருதரப்பு விஜயம் மேற்கொண்டும் பிம்ஸ்டெக் மாநாட்டில் கலந்துகொள்வதற்காகவும் கொழும்பிற்கு வருகைதந்துள்ளேன்.
அடுத்த இரு நாட்களிலும் நடைபெறவிருக்கும் எனது கலந்துரையாடல்களையும் ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன். https://t.co/5ii9V6Moi1
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) March 27, 2022
இதையும் படிக்க: நெல்சன் மண்டேலாவின் கைது ஆணை – எவ்வளவு தொகைக்கு ஏலம் விட முடிவு தெரியுமா?
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM