மைதானத்தில் தண்ணீர் பாட்டில்களை எடுத்து கொண்டு ஓடி எடுபிடி வேலை செய்து வந்த முன்னணி வீரர் தரமான கம்பேக் கொடுத்து விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
ஐபிஎல் 15வது சீசன் போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.
நேற்று நடைபெற்ற மும்பை – டெல்லி போட்டியில் டெல்லி அணி வெற்றி பெற்றது.
இப்போட்டியில் டெல்லி அணி வீரர் குல்தீப் யாதவ் 3 விக்கெட்களை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு வழி வகுத்தார்.
அதிலும், முதலில் பேட்டிங் செய்த மும்பை அணியில் ரோகித் சர்மா – இஷான் கிஷான் அதிரடி காட்டினர். இதனால் 60 ரன்களை தாண்டியும் டெல்லி பவுலர்களால் அவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை.
அப்போது களத்திற்கு வந்த சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் மேஜிக் காட்டினார்.
41 ரன்கள் எடுத்து ரோகித் சர்மா நல்ல ஃபார்மில் இருந்த போது தனது முதல் ஓவரை வீசிய குல்தீப் யாதவ், அவரின் ஆசையை தூண்டினார்.
நன்கு தூக்கி அடிப்பது போன்று ஒரு பந்தை போட்டுக்கொடுத்தார். இந்த வலையில் சிக்கிய ரோகித் சர்மா பந்து மெதுவாக வந்தது என்று தெரியாமல் சிக்ஸர் அடிக்க முயன்று அவுட்டானார்.
கடந்த 2 ஆண்டுகளாக இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காமல் உள்ள குல்தீப் ஐபிஎல்-லும் புறக்கணிக்கப்பட்டார். 2 ஆண்டுகளாக பேட்ஸ்மேன்களுக்கு ஜூஸ் எடுத்துச் செல்வது போன்ற பணிகள் தான் அவருக்கு பெரும்பாலும் வழங்கப்பட்டது. இதனை குல்தீப் யாதவே பகிரங்கமாக தெரிவித்தார்.
இந்நிலையில் அதற்கெல்லாம் பதிலடி தரும் வகையில் அசத்தலாக மீண்டும் பார்முக்கு திரும்பியுள்ளார்.