உக்ரைன்
மீது
ரஷ்யா
போர் தொடுத்துள்ளது. உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷ்ய படைகள் தாக்கி அழித்துள்ளன. அதேசமயம், உக்ரைன் மீதான போரை ரஷ்யா கைவிட வேண்டும் என ஐ.நா., சபை, உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. ஐ.நா., சபை தங்களால் இயன்ற முயற்சிகளை, செய்து பேச்சுவார்த்தை மூலம் இதற்கு தீர்வு காண வலியுறுத்தி வருகிறது.
அதன்பலனாக, உக்ரைன் – ரஷ்யா இடையேயான முதல் கட்ட பேச்சுவார்த்தை பெலாரஸ் நாட்டின் எல்லை நகரமான கோமலில் கடந்த மாதம் 28ஆம் தேதி நடைபெற்றது. சுமார் ஐந்து மணி நேரம் நடைபெற்ற அந்த முதற்கட்ட பேச்சுவார்த்தையில், எந்த உறுதியான முடிவும் எடுக்கப்படவில்லை.
அதன் தொடர்ச்சியாக, கடந்த 3ஆம் தேதி இரு நாட்டு பிரதிநிதிகளுக்கும் இடையே இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதன்பிறகு மூன்றாம், நான்காம் கட்ட பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான ஆக்கப்பூர்வமான முடிவுகள் எதுவும் இதுவரை எடுக்கப்படவில்லை.
அதேசமயம், இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டுள்ள ரஷ்ய பிரதிநிதி ஒருவர் கூறுகையில், “பேச்சுவார்த்தையில் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், விரைவில் ஒரு கூட்டு நிலைப்பாட்டை எட்ட முடியும்” என்று தெரிவித்துள்ளார்.
பனிக்குடம் உடையாமல் பிறந்த குழந்தை: மருத்துவ உலகின் அதிசயம்!
இந்த நிலையில், ரஷ்யா – உக்ரைன் ஆகிய நாடுகள் இடையே துருக்கியில் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. இந்த பேச்சுவார்த்தை வருகிற 30ஆம் தேதி (நாளை மறுதினம்) முடிவடைகிறது. இந்த தகவலை உக்ரைன் சார்பில் பேச்சுவார்த்தையில் பங்கேற்கிற டேவிட் அராகாமியா ‘பேஸ்புக்’ பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அடுத்த செய்திஏப்ரல் 19 வரை மீண்டும் முழு ஊரடங்கு – பிரதமர் எடுக்கும் முடிவு?